30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

அவசியம் படிக்க..உங்கள் சருமத்தில் என்னென்ன விஷயங்கள் நீங்கள் செய்யக் கூடாது தெரியுமா?

சிலர் தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் சருமம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இதனால் சுருக்கம், வறட்சி என பல பிரச்னைகளால் விரைவில் முதுமை தோற்றம் வர வாய்ப்பிருக்கிறது.

மாலை வெயில்

காலை வெயில் ஆபத்து தராது. ஆனால் அதற்கு பின் மாலை வரை புறஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவை செல்களை வேகமாக தாக்கி உடையச் செய்யும். இதனால் சரும பிரச்னைகள், மற்றும் சுருக்கம் விரைவில் வந்துவிடும். அதனால் கட்டாயம் சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்.

இரவில் மேக்கப் போடகூடாது

இரவில் மேக்கப், எண்ணெய், க்ரீம் போன்றவற்றோடு தூங்கும்போது அவை சருமத்துளைகளை அடைத்து புதிய செல்கள் உருவாகாமலும் இறந்த செல்களை வெளியேற்றாமலும் தடுக்கப்படும்.எனவே இரவு படுக்கும் முன் முகத்தை கழுவி காற்றோட்டத்தை சருமத்திற்கு கொடுங்கள்.

முகப்பருக்களை தொடகூடாது

முகப்பருக்களை நிறைய பேர் கிள்ளுவார்கள். தொட்டு தொட்டு பார்ப்பார்கள் மேலும் அரிக்கும் இடத்தில் சொறிவார்கள். இப்படி செய்தால் முகத்தில் அனைத்து பகுதிகளிலும் முகப்பரு தோன்றும்.

ஷவர் குளியல்

ஷவரில் சூடான நீரில் குளிப்பதால் உடலில் சருமத்தின் மேல் இயற்கையான எண்ணெய் சுரப்பது குறைகிறது. இதனால் அதிக அழுக்கு, வறட்சி, ஆகியவை ஏற்பட்டு சருமம் எளிதில் சுருக்கங்களை பெறுகிறது.

ஸ்க்ரப் அடிக்கடி செய்தல்

நீங்கள் அடிக்கடி கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த ஸ்க்ரப் சருமத்தை சுத்தம் செய்தாலும் எரிச்சலடையச் செய்யும் என்பது உண்மை. வாரம் ஒரு நாள் செய்தால் போதுமானது.

குறைந்த நேரம் தூங்குதல்

தூங்கும் நேரத்தில்தான் திசுக்கள் வளர்ச்சிய்டைகின்றன. இதனால் இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் சரியான தூக்கம் இல்லாதபோது, சரும செல்கள் தங்கள் பணிகளை செய்ய முடிவதில்லை.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…15 நிமிஷத்துல உங்க முகம் பளிச்சின்னு ஆயிடும்.!

nathan

குளிர்காலத்தில் கோகோ பட்டரை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் என்ன அற்புதம் நடக்கும்?

nathan

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்

nathan

சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்….

nathan

ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் அற்புத வழிகள்!

nathan

இந்த 2 பொருட்கள் முகத்தில் உள்ள சுருக்கத்தை மாயமாய் மறையச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan