25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
0.300.053.800.668.160.90 1 1
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு ஜூஸ் குடித்தால் போதும்

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் டயட் என்கிற பெயரில் உங்கள் உடல்நலன்களை கெடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான பாதையில் வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான ஜீஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
புதினா
கொத்தமல்லி
கறிவேப்பிலை
பெரிய நெல்லிக்காய்
எலுமிச்சை

செய்முறை
ஒரு பாத்திரத்தில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெரிய நெல்லிக்காய் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 1 கப் தண்ணீர் கலந்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
பின் இதை வடிகட்டி தேவையெனில் அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பை கலந்து தினமும் இந்த ஜூஸை காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.
நன்மைகள்
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி உடல் எடையை குறைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
உடலின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது.
இந்த ஜூஸில் அயர்ன் மற்றும் விட்டமின் C நிறைந்து இருப்பதால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகிறது.
ஃபைபர் சத்துக்கள் இந்த ஜூஸில் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையுமே வெளியேற்றி உடலை சுத்தமாக்க உதவுகிறது.
குறிப்பு
இந்த ஜூஸை உடனுக்குடன் தயார் செய்து குடிப்பது நல்லது. ஏற்கனவே தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கக்கூடாது.
ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகக் குடிக்க வேண்டும் அதற்கு மேல் குடிக்கக்கூடாது. பத்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் குடிக்கலாம்.0.300.053.800.668.160.90 1 1

Related posts

மெலிதான உடல் வாகு வேண்டுமா?

nathan

நீங்களும் இதை செய்து பாருங்கள் பத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்..

nathan

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

nathan

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

nathan

தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி!

nathan

சரியான முறையில் எளிமையாக உடல் எடையை குறைக்க இவற்றை முயன்று பாருங்கள்

sangika

உடல்பருமன் குறைக்கும் உணவுகள்!

nathan

எடை குறைய இஞ்சி நீர் குடிக்கவும்

nathan

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள்!

nathan