25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Reasons for stomach pain
மருத்துவ குறிப்பு

அவசியம் படிக்க.. வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்

வயிற்றுவலி மிக மோசமான வலிகளுள் ஒன்று. வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.

வயிற்று வலி வருவதற்கான காரணங்கள்
வயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்… என இருக்கும். உடனே அது வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா இல்லை வேறு ஏதேனுமா என நாம் குழம்புவோம். மருத்துவரிடம் போனால், `எவ்வளவு நாளா வயிற்றுவலி’ என ஆரம்பித்து, `நெஞ்சு எலும்புக்குக் கீழேயா, மார்பின் நடுப் பகுதியிலா… எங்கே எரிச்சல்?, கொஞ்சம் சாப்பிட தாமதமானால், பசி வரும்போது வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்புவார்.

ஒருவேளை பித்தப்பைக் கல் இருந்தாலும் இருக்கலாம் என அனுமானித்து, ஸ்கேன் எடுக்கச் சொல்லும் மருத்துவர்களும் உண்டு. முன்பெல்லாம், ‘இது பித்தப்பை வீக்கமாக இருந்தாலும் இருக்கும்’ என சந்தேகப்பட்டால், மருத்துவர் வயிற்றைக் கைகளால் அழுத்திப் பரிசோதனை செய்வார். மூச்சை நன்கு இழுத்துவிடச் சொல்லி, நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக விரல்களால் அழுத்திப் பார்த்து, முடிவு செய்துவிடுவார். இதற்கு `மர்ஃபி சோதனை’ என்று பெயர். இன்றைக்கு அதைப் பலர் ஓரம்கட்டிவிட்டார்கள். நோயாளிகளை ஸ்கேனுக்கு அனுப்புகிறார்கள்.

ஆனாலும், பித்தப்பைக் கல்லுக்கான காரணம் என்ன என்று மிகத் துல்லியமாக இன்றும் நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. நம் ஜீரண மண்டலத்தின் தன்மையே ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றால் குழம்பிப்போய் இருக்கிறது.

அதோடு, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்து உடல் மெலிவது, நார்ச்சத்து, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவது… என பித்தப்பை அழற்சிக்கும், கல்லுக்கும் பல காரணங்கள். முதலில் வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.

வயிற்றுவலிக்கான காரணங்கள் :

* நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

* இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்கலாம்.

* நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.

* விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

* பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி… என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு சோடா குடிச்சா, சரியாகிடும்’, என்ற அலட்சியமும், ‘ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்.Reasons for stomach pain

Related posts

தெரிஞ்சிக்கங்க… பெண்கள் 30 வயதிற்கு பின் கர்ப்பமடைந்தால்.. இந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்..!

nathan

மூக்கடைப்பை போக்க சில வழிமுறைகள்…..

sangika

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

மூட்டுத் தேய்மானமா? இதோ தீர்வு

nathan

சரும நோய்க்கு சித்த மருந்துகள்

nathan

பொறாமை என்ற தீய குணத்தை அழிப்போம்

nathan

முதல் குழந்தை தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

nathan

உங்களுக்கு தெரியுமா இரைப்பை கோளாறுகள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம்!

nathan