25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1539170339
தலைமுடி சிகிச்சை

ஆண்களே, முடி உதிர்வை முற்றிலுமாக தடுக்கும் வெந்தய- ஆலிவ் எண்ணெய்…! முயன்று பாருங்கள்

ஆண் என்றாலும் பெண் என்றாலும் முடியை பெரிதும் பாராமரிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். முடியை நாம் எல்லோரும் நிச்சயம் அதிகம் நேசிப்பது உண்டு. கண்ணாடியை பார்க்கும் போதும் தங்கள் முடியை கொதுவது ஆண் பெண் என இருவருக்கும் பிடித்தமான விஷயமாகும். இந்த முடி உதிர்வை யவராலும் நிச்சயம் பொருத்து கொள்ள முடியாதுதான். நம்மை மிகவும் அழகாக காட்டும் இந்த முடியை நாம் மிகவும் விரும்புவோம்

இந்த முடி உதிர்வு பிரச்சினை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் உள்ளது. இத்தகைய வேதனையை தீர்க்க ஒரு அருமையான வழி இருக்கிறது. வெந்தய ஆலிவ் எண்ணெய் முறை, முடி உதிரும் பிரச்சினைக்கு முற்று புள்ளி வைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

முடி ஏன் உதிர்கிறது ..? பொதுவாக முடி உதிர்வு ஏற்பட்டு மண்டை வழுக்கை பெறுவது பல காரணிகளாக சொல்லலாம். சீரற்ற உணவு முறை, பரம்பரை ரீதியாக, வலிமையற்ற முடி, அசுத்தமான சூழல், வேதி பொருட்களை பயன்படுத்துதல்… இப்படி ஒரு சில முதன்மையான காரணங்கள் இருக்கின்றன.

முடியின் ஆரோக்கியம் முக்கியம்..! முடியும் நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். இயற்கையான பொருட்கள் பயன்படுத்தினாலே முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலையில் அழுக்குகள் சேர்ந்தால் தலையை உடனே அலசிவிட வேண்டும்.

வெந்தய ஆலிவ் எண்ணெய்..! இந்த எண்ணெய் சற்றே வித்தியாசமானதாக இருக்க கூடும். ஆனால் உண்மையில் இது சிறந்த எண்ணெய்யாக கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யை தயாரித்து முடியில் தேய்த்து பயன்படுத்தி வந்தால் பல விதமான நன்மைகளை பெறலாம்.

இதற்கு தேவையானவை :- வெந்தயம் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் வெந்தயத்தை நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். முக்கியமாக இதில் ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். பிறகு இதனை சலித்து கொண்டு, இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு 5 நிமிடம் இதனை ஊற வைத்து கொள்ளவும்.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..? நாம் தயாரித்த இந்த பேஸ்டை முடியின் அடி வேரில் தடவி ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து தலையை சிகைக்காய் சேர்த்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால் முடி உதிரும் பிரச்சினை விரைவில் நின்று விடுமாம்.

ஏற்படும் நன்மைகள்… வெந்தயத்தில் அதிகமான அளவில் புரதமும், நிக்கோடிக் அமிலமும் உள்ளது. எனவே, இவை முடியின் வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வதை நிறுத்தி விடும். மேலும், ஆலிவ் எண்ணெய்யில் ஏராளமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முடிகள் பாதிக்காமல் தடுக்கும்.

ஆலிவ் எண்ணெய் இந்த ஆலிவ் எண்ணெய்யை நாம் இப்படியும் பயன்படுத்தி முடி உதிர்வை தடுக்கலாம். இது நரை முடி முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை அனைத்திற்கும் தீர்வை தரும்.

தேவையானவை :- ஆலிவ் எண்ணெய் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 3 டீஸ்பூன் தேன் 3 டீஸ்பூன்

செய்முறை :- ஆலிவ் எண்ணெய்யை இரு வகையாக நாம் பயன்படுத்தலாம். முதல் முறையை செய்ய, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தடவி குளிக்கலாம். இது முடி உதிர்வு, வறட்சி, அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தும். மற்றொரு முறையானது, ஆலிவ் எண்ணெய் மற்றும் தேனை ஒன்றாக கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் நரைகள் அற்ற ஆரோக்கியமான முடியை பெறலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

1 1539170339

Related posts

கறிவேப்பிலையுடன், நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை.

nathan

டிப்ஸ் இங்கே.. உச்சந்தலை பிசுபிசுப்பாக உள்ள எண்ணெய் தலைமுடியை தவிர்க்க

nathan

முடி பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! செம்பருத்தி எண்ணெய் எப்படி தயாரிப்பது?

nathan

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

nathan

சுருள் முடியை எப்படி பராமரிக்கலாம் ?செய்யக் கூடியவை..செய்யக் கூடாதவை !!

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்…

nathan

அன்னாசியை உபயோகித்து அடர்த்தியான அழகான முடியை பெறுவதற்கான அட்டகாசமான ஐடியா!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?

nathan