என்னென்ன தேவை?
தோல் நீக்கி நறுக்கிய பலாக்கொட்டை – 1 கப்,
முருங்கைக்காய் – 1,
குழைய வேகவைத்த பயத்தம்பருப்பு – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்.
அரைக்க…
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 4 இலை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உதிர்த்த வெங்காய வடவம் – 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் நறுக்கிய முருங்கைக்காய், பலாக்கொட்டை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பயத்தம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து 2 கொதி வந்ததும், தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி கலந்து இறக்கவும்