26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்

இவ்வளவு நன்மைகளா! சந்தனப் பேஸ் பெக் முகப்பொலிவை அதிகரிக்கும்

தக்காளி
சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

தயிர்
தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.

maxresdefault

முட்டை மற்றும் தேன்
மற்றொரு சந்தன ஃபேஸ் பேக் தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

மஞ்சள் தூள்
சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

முல்தானி மெட்டி
சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வோட்டர்
பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வோட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!…

sangika

சூப்பர் சூப்பர்.. பயனுள்ள 64 அழகு குறிப்புகள் உங்களுக்காக ..!!!

nathan

நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது

nathan

இயற்கையான முறையில் முகத்தை பிரகாசமாக்க வேண்டும் என்றால் இத செய்யுங்கள்!…

nathan

முகத்துக்கு சூப்பர் டிப்ஸ் ! !

nathan

அப்போ இதை செய்யுங்கோ..!!அக்குளில் கருமை நிறம் மாற ..

nathan

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan