மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஒற்றை தலைவலி என்றால் என்ன?

தீராத கஷ்டத்தை தரும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. எனினும் அதற்கான காரணம் என்ன என அறிந்து கொள்வோம்.

நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் ஆகியவை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்கும் என கூற்படுகின்றது.

எனினும், இதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போது,

பரம்பரையாகவும், குடும்ப ரீதியாகவும் ஒற்றை தலைவலி ஒருவரை தாக்குவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒற்றை தலைவலி என்றால் நோயா?

ஒற்றை தலைவலி என்றால் ஒருவித நரம்பியல் தொடர்பான நோயாகும்.
மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே ஒற்றை தலைவலியாகும்.

ஒற்றை தலைவலி என்பது ஒரு வகையான தலைவலி கோளாறு ஆகும். அதாவது, மூளையின் கட்டி ஏற்படுத்துவதனை போன்ற எந்த இரண்டாம் காரணமும் இல்லை. தலைப்பகுதியின் ஒரு பக்கத்தில் வலியைக் குறிக்கும் கிரேக்க வம்சாவளிகளிடமிருந்து பெறப்பட்ட ‘ஹீமிகிரானியா’ என்பதன் அர்த்தம் மிக்ரைனாகும்..

பொதுவாக ஒற்றை தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலையின் ஒரு பக்கத்தில் ஒரு தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்படக்கூடிய பக்கங்கள் மாறலாம். இது உலகின் மிகவும் பொதுவான காரணங்கள் ஒன்றாகும்.

நம் நாட்டின் மக்கள் தொகையில் 10% நரம்பு மண்டல சீர்கேடுகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது பொதுவான நரம்பியல் சிக்கல்களில் ஒன்றாகும். அந்த 10% வீதத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாகும்.

எந்த நோயின் அறிகுறி?

  • ரத்தசோகை,
  • உயர் ரத்த அழுத்தம்,
  • மூளை அழற்சி,
  • மூளைக் கட்டிகள்
  • ஆகிய நோய்களின் அறிகுறியாகவும் ஒற்றை தலைவலி வரக்கூடும்.
  • தலைக்கு செல்லும் நரம்புகள் சுருங்கினால் இந்த நிலை ஏற்படும்.
  • ரத்த ஓட்டம் தடைபட்டாலும் ஒற்றை தலைவலி வரும்.
  • பெண்களுக்கு மாதவிலைக்கு காலங்களில் ஒற்றை தலைவலி வரக்கூடும்.
  • தலைவலி யாரை அதிகமாக தாக்கும்?
    • 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒற்றை தலைவலியின் தாக்கும் அதிகம் ஏற்படும்.
    • குழந்தைகளை ஒற்றை தலைவலி தாக்கினால் அதற்கு வேறு காரணம் உண்டும்.
    • அது சத்து குறைபாடு,
    • பார்வை குறைபாடு
    • பரம்பரை சார்ந்த குறைபாடுகள்
    • போன்றவை காரணமாக இருக்கலாம்.
    • தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்?ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும்.தலையில் புண்,

      சீழ்பிடித்தல்,

      கழுத்து, தலையில் ஏற்படும் தலை பிடிப்பு,

      மூளை ரத்தக்குழாய் போன்ற பாதிப்புகளினால் தலைவலி ஏற்படும்.

      மெல்லுதல்,
      அதிகமாக பேசுதல்,
      பல் துலக்குதல்,
      குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல்
      போன்ற எது வேண்டுமானாலும் தலைவலியை தூண்டலாம்.

      கிட்டப்பார்வை,
      தூரப்பார்வை,
      கண் சிவந்து போதல்
      போன்ற பார்வை குறைபாடு,
      கண்ணில் காயம் ஏற்படுவதாலும் தலைவலி வரலாம்.

      காதின் மையப்பகுதி நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால்
      கழுத்து வலி மற்றும் கடுமையான தலைவலி ஏற்படலாம்.

      பல்வலி,
      நோய் தொற்றுகள்,
      தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைதல்
      போன்றவற்றினாலும் தலைவலி ஏற்படும்.

      உடலுக்கு போதிய அளவு உணவு உட்கொள்ளாமை,
      தேவையான அளவு ஓய்வு எடுக்காமல் போவது,
      உடல்சூடு,
      வயிறு தொடர்பான நோய்கள்,
      மன அழுத்தம் ஆகியவற்றாலும் தலைவலி வரலாம்.

    • ஒற்றை தலை வலியை போக்குவது எப்படி?ஒற்றை தலை வலியை முழுமையாக குணப்படுத்த முடியாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும். அதன் மூலம் வலியை கட்டு படுத்தலாம். ஒற்றை தலைவலியை உண்டாக்கும் சூழ்நிலைகளையும் இனம் கண்டு அவற்றை தவிக்கலாம். அதற்கமைய இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.hj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button