மருத்துவ குறிப்பு

ஸ்கேன் படங்கள்! கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை

கர்ப்பத்தின் பொழுது ஸ்கேன் பரிசோதனை மிக முக்கியமானது; கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை குறித்து அறிய வேண்டியது மிகவும் முக்கியம்; ஸ்கேன் படங்கள் மூலமும், ஸ்கேன் பரிசோதனை மூலமும் எளிதில் தாயின் வயிற்றில் வளரும் கருவின் நிலையை அறியலாம்.

குழந்தையின் நிலை என்று கூறும் பொழுது குழந்தையின் உடலில் ஏதேனும் ஆரோக்கிய சீர்கேடு இருந்தால் கூட, அதை கருவிலேயே கண்டு அறிந்து குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை அறியவும், முடிந்தால் அதனை கருவிலேயே குணப்படுத்தவும் கூட முயலலாம். இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் படங்களில் குழந்தைகளின் நிலை பற்றி படித்து, புகைப்படங்களை பார்த்து அறிவோம்.

preview 1538561224

எப்பொழுது காண முடியும்! குழந்தைகள் தாயின் வயிற்றில் உருவாகி இருப்பதை மாதவிடாய் தள்ளி போவதன் மூலம் பெண்கள் அறிந்து கொள்வர்; குழந்தைகள் பெண்கள் வயிற்றில் உருவாகி முடிக்க 3 முதல் 4 வாரங்கள் எடுத்துக் கொள்ளும். அவை சற்று வளர்ந்த பின் 6 முதல் 7 வார காலத்தில் தான் குழந்தைகளின் இதய துடிப்பை ஸ்கேன் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

முழு வளர்ச்சி பெற்ற குழந்தை! பின் 15வது வாரம் வரையில் ஒரு விதை வடிவ மூட்டை போன்ற குழந்தையையே காண முடியும். ஆனால், 27 முதல் 28 ஆம் வாரத்தில் குழந்தையின் முழு வளர்ச்சியை அதாவது முழுமையான உருவாக்கம் பெற்ற குழந்தையை மிகவும் தெளிவாக தாயின் வயிற்றில் காண முடியும். இந்த கண் கொள்ளா காட்சியை காட்ட கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனை மிகவும் உதவுகிறது.

2 1538561248

என்னென்ன காணலாம்? குழந்தை தாயின் கர்ப்ப காலத்தில் உருவான பின் முதன் முதலாக ஸ்கேன் பரிசோதனை மூலம் குழந்தையின் இருப்பிடத்தை மட்டுமே காண முடியும். பின்னர் ஒரு சில வாரங்களுக்கு பின் குழந்தையின் இதய துடிப்பை கேட்டு அறிய முடியும். இதன் பிறகு குழந்தைகளின் தலை மற்றும் தலையின் அமைப்புகள், உடலின் வடிவம் மற்றும் குழந்தை உள்ள அம்னியாட்டிக் சாக் போன்ற உறைகள் இவற்றையும் ஸ்கேன் பரிசோதனை மூலம் காண முடியும்.

42 1538561272

ஏலியன் குழந்தை! குழந்தைகள் தாயின் வயிற்றில் இருட்டான கருவறையில் வளர்வதை ஸ்கின் பரிசோதனை மூலம் காணும் பொழுது, குழந்தைகள் ஒரு கருப்பு ஏலியன் போலவே ஆரம்ப கால கட்டத்தில் காட்சி அளிப்பர். இந்த மாதிரியான உங்கள் குழந்தையின் ஸ்கேன் படத்தை பார்த்து பயம் கொள்ள வேண்டும்; அவர்கள் வளர வளர இந்த உருவம் மாறுபடும்.

7 1538561304

படிப்படியான வளர்ச்சி! நாமும் இந்த மாதிரி ஒரு வடிவத்தில் இருந்து தான் இன்று இவ்வாறு வளர்ந்து இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தவும். குழந்தைகள் சரியான வளர்ச்சி மற்றும் வடிவம் பெற்ற பின், அவர்கள் சாதாரண மனித உருவங்களை போல காட்சி அளிப்பர். மனிதர்களின் வளர்ச்சி என்பதை படிப்படியாக நிகழக்கூடியது தான்; குழந்தை கருவில் உருவான பின் ஏற்படும் வளர்ச்சியும் சரி, பிறந்த பின் ஏற்படும் வளர்ச்சியும் சரி. மெதுவானதாக, படிப்படியானதாக இருக்கும்.

6 1538561292

என்னென்ன பரிசோதனைகள்!? குழந்தைகள் தாயின் வயிற்றில் வளரும் பொழுது எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனைகளில் பல விதங்கள், பல வகைகள் உள்ளன. இந்த ஸ்கேன் பரிசோதனைகளின் வகைகளை இப்பொழுது பார்க்கலாம்: ஸ்டாண்டர்ட் ஸ்கேன் பரிசோதனை என்பது 2D வடிவில் கருவறையில் உள்ள குழந்தையை காட்டுவதற்கு உதவும். டாப்ளர் இமேஜிங் ஸ்கேன் பரிசோதனை மூலம் குழந்தையின் உடலில் உள்ள இரத்த ஓட்டம் போன்ற விஷயங்கள் குறித்த தகவல்களை பற்றி அறியலாம்.

5 1538561283
வேறு என்ன அறியலாம்? ஸ்கேன் பரிசோதனைகளில் மேலும் இரண்டு வகைகள் உள்ளன; அவை என்னென்ன என்றால், ட்ரான்ஸ்வெஜினல் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலம் குழந்தை உருவாக்கத்தின் நிலைகளை தெளிவாக, சிறந்த தரத்தில் படங்களாக பார்த்து அறிய முடியும். மேலும் ஃபெடல் எக்கோ கார்டியோகிராபி ஸ்கேன் பரிசோதனை மூலம் குழந்தைகளின் இதயம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

3 1538561257

பயம் வேண்டாம்! குழந்தைகளை சரியாக ஸ்கேன் பரிசோதனைகளின் பொழுது காண முடியவில்லை என்றால் பெற்றோர் பயம் கொள்ள தேவையில்லை; அதே போல் குழந்தைகளின் உடல் உறுப்புகளில் ஏதேனும் குறைகளை கண்டாலும் பெற்றோர் மனம் தளராமல் வரவிருக்கும் தங்கள் வாரிசிற்கு வசந்தமான எதிர்காலத்தினை எப்படி அமைத்து கொடுப்பது என்பது பற்றி தான் சிந்திக்க வேண்டும். நடப்பது எதுவாயினும் நன்மைக்கே என்ற எண்ணத்தில் கருவில் உருவான குழந்தையை பெற்று எடுத்து முழு அன்பு மற்றும் பாசம் காட்டி வளர்த்து, சிறந்த பெற்றோராக இருக்க முயலுங்கள்..!

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button