25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5 1537965049
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இளமையான முகம் முதல் முகப்பரு வரை, அனைத்திற்கும் பயன்படும் ட்ராகன் பழம்..!

பல வகையான பழங்கள் இந்த பூமியில் இருந்தாலும், அதில் ஒரு சில மட்டுமே மனிதனுக்கு பயன்படுகிறது. ஒரு சில பழங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த்தும், ஒரு சில பழங்கள் முக அழகை கூட்டும். அந்த வகையில் ஒரு அரிய வகை பழம் இருக்கிறது. இது முக அழகு முதல் முடியின் ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. என்ன பழம்னு யோசிக்கிறீங்களா..? அதுதான் ட்ராகன் பழம்.

இந்த பழத்தை வைத்து கொண்டு என்னென்னமோ செய்யலாம் என அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். ட்ராகன் பழத்தை கொண்டு செய்யப்படும் சில முக்கிய அழகியல் முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டு நலம் பெறலாம் நண்பர்களே.

ட்ராகன் பழம்

இது பலருக்கு அறிமுகம் ஆகாத ஒரு பழமாக தான் இருந்து வருகிறது. இதில் ஜுஸ், மில்க்ஷேக் போன்றவற்றை தயாரித்து குடித்தால் அருமையாக இருக்கும். கூடுதலாக இது முகம் மற்றும் முடியின் அழகையும் மேம்படுத்துமாம். இதன் மேல் உள்ள வரிகளின் காரணத்தால், சீனர்கள் இதற்கு ட்ராகன் பழம் என பெயர் வைத்தனர்.

ட்ராகன் பழத்தில் ஊட்டசத்துக்கள் இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் தான் முக அழகிற்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. ஒரு ட்ராகன் பழத்தில் உள்ள ஊட்டசத்துங்கள் இவையே…

புரதம் நீர்சத்து பொட்டாசியம் வைட்டமின் சி இருப்புசத்து வைட்டமின் பி கால்சியம்

முக பருக்களை நீக்க முகத்தின் அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த முகப்பருக்கள் தான். இதனை நீக்க பல வகையான வேதி பொருட்கள் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள். பருக்களை நீக்க ட்ராகன் பழத்தை நன்கு அரைத்து முகத்தில் பஞ்சை கொண்டு பூசி வந்தாலே போதும். இது விரைவிலே நீங்கி விடும்.

இளமையை நீடிக்க நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை தான். இதனை நிறைவேற்ற ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. இந்த ட்ராகன் பழ குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையானவை :- யோகர்ட் 1 டேபிள்ஸ்பூன் ட்ராகன் பழம் பாதி

செய்முறை :- முதலில் ட்ராகன் பழத்தை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அவற்றுடன் யோகர்ட் சேர்த்து மறுபடியும் அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்யவும். இந்த அழகு குறிப்பை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் நீங்கள் என்றும் 16 போல இளமையாக இருப்பீர்கள்.

பளபளப்பான முகத்திற்கு முகம் மிகவும் பளபளப்பாக இருக்க ஒரு அருமையான வழி இருக்கிறது. முகத்தை பொலிவு பெற வைக்க ட்ராகன் பழம் நன்கு உதவுகிறது. இந்த பழம் முகத்தின் செல்களை சுறுசுறுப்பாகி பொலிவு பெற செய்யுமாம். இந்த பழத்தை ஜுஸ் போட்டு குடித்து வந்தாலே முகம் பளபளப்பாகும்.

முடி அடர்த்தியாக வளர முடி கொட்டும் பிரச்சினை உங்களுக்கு இருந்தால், அதனை நினைத்து இனி வருந்த வேண்டாம். சிறந்த தீர்வாக இந்த ட்ராகன் பழம் இருக்கிறது. இந்த பழம் ஒன்றை எடுத்து கொண்டு, தோலை நீக்கி நன்கு அரைத்து முடியின் அடி வேரில் தடவி வந்தால் முடி உறுதி பெறும். மேலும், முடி உதிரும் பிரச்சினையும் நின்று விடும்.

பற்களின் அழகு

இந்த பழத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே, இதனை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் உங்களின் பற்கள் வெண்மையாக மாறும். அத்துடன் பற்கள் சார்ந்த கோளாறுகளும் குணமாகும். பற்கள் உறுதியாக இருக்க இந்த ட்ராகன் பழம் பயன்படும்.

வறண்ட சருமத்திற்கு முகம் வறண்டு உள்ளதா..? இதனால் முகத்தில் கீறல்கள், சொரசொரப்பான சருமம் ஏற்படுகிறதா..? இனி கவலை வேண்டாம். முகத்தை அழகாக வைக்க ட்ராகன் பழம் பயன்படும். இதனை முகத்தில் அரைத்து பூசி வந்தாலே முக வறட்சி நீங்கி, ஈரப்பதத்துடன் இருக்கும். முக அழகை மேம்படுத்துவதில் இந்த ட்ராகன் பழத்திற்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, மேற்சொன்ன குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தினால் நலம் பெறலாம். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

5 1537965049

Related posts

தெரிஞ்சிக்கங்க…நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது முதல் புற்றுநோயைத் தடுப்பது வரை பூண்டின் நன்மைகள்..!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி அடிக்கடி ஏற்படுகிறதா கிராம்பு மற்றும் சீரகத்தினை கொண்டு தலை வலியை போக்க முடியும் !

nathan

தூதுவளை சூப்

nathan

உணவே மருந்து !!!

nathan

அறுகம்புல் சாறு தயாரிப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

nathan

mappillai samba rice benefits in tamil – மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகள்

nathan

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

nathan

மனநலத்தை காக்கும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ் -தெரிஞ்சிக்கங்க…

nathan