25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1 1538219941
ஆரோக்கியம் குறிப்புகள்

படிக்கத் தவறாதீர்கள்! பகலில் தூங்கினால் எடை அதிகரிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பது உண்மையா?

தூக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். தூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடிய ஒன்றுதான்.

பெரும்பாலானவர்கள் மதிய நேரத்தில் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் மதியம் தூங்குவது மாரடைப்பை உருவாக்கும் என்றும் நம்புகிறார்கள். இந்த பதிவில் மதிய தூக்கம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு பதிலும், மதியம் தூங்குவதில் உள்ள சாதக, பாதகங்களையும் பார்க்கலாம்.

மதிய தூக்கம்

மதிய தூக்கம் என்பது அனைவருக்கும் புத்துணர்ச்சி தரும் ஒரு விஷயமாகும். ஜப்பான் போன்ற நாடுகளில் மதிய தூக்கம் என்பது அனைத்து அலுவலகங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் மதிய தூக்கம் மூளையை சுறுசுறுப்பாக்கும் என்பது அவர்களின் கருத்தாகும். மதிய தூக்கம் உங்களின் செயல்திறனை அதிகரிக்கும் என்று அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரவு தூக்கம் பாதிப்பு

உங்கள் இரவு தூக்கத்தை பாதிக்கும் ஒரு மிகமுக்கியமான செயல் பகல் நேர தூக்கமாகும். நீங்கள் பகல் நேரத்தில் தூங்கினால் நிச்சயமாக உங்களின் இரவு தூக்கம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் தூங்காதவர்களுக்கு பகல் நேர தூக்கம் ஒரு வரப்பிரசாதமாகும். ஒருவேளை நீங்கள் இரவில் மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை நன்றாக தூங்கினால் உங்களுக்கு பகல் நேர தூக்கம் அவசியமாக இருக்காது.

சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம்

நீங்கள் தூக்கம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அதிக மனஅழுத்ததில் இருந்தாலோ பகல் நேர தூக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இன்சொமேனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பகல் நேரத்தில் தூங்குவது உங்களுடைய இரவு நேர தூக்கத்தை பாதிப்பதால் பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். பகல் நேரம் தூங்குவதில் பல வகைகள் உள்ளது.

திட்டமிட்ட பகல் தூக்கம்

திட்டமிட்ட பகல் நேர தூக்கம் என்பது தூங்கும்போதே எழும் நேரத்தை திட்டமிட்டுவிட்டு தூங்குவதாகும். இரவு நேர தூக்கத்தை போல எழும்நேரத்தை கணக்கிட்டு சரியான நேரத்தில் எழுவதாகும்.

அவசர தூக்கம்

இது பெரும்பாலும் சிலருக்கு மட்டும் ஏற்படக்கூடியதாகும். இந்த வகையான தூக்கத்தை மேற்கொள்பவர்கள் அதிகளவு சோர்வு அல்லது ஏதேனும் உடல்நல கோளாறுகள் இருப்பவர்கள் செய்வதாகும். அவர்களுக்கு பகல் நேர தூக்கத்தை மேற்கொள்வது தவிர வேறு வழியல்ல.

வழக்கமான தூக்கம்

இந்த வகையான தூக்கம் என்பது தொடர்ந்து தினமும் ஒரே நேரத்தில் தூங்குவது வழக்கமான தூக்கம் எனப்படுகிறது. உதாரணத்திற்கு பலருக்கும் தினமும் மதியம் சாப்பிட்டபின் தூங்கும் பழக்கம் இருக்கும். இதுதான் வழக்கமான தூக்கமாகும். பகல் நேர தூக்கத்தில் சில பாதகங்கள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்

தினமும் மதிய நேரம் இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் வரை தூங்குபவர்களின் மூளையின் செயல்திறனானது தூங்காமல் இருப்பவர்களின் மூளையின் செயல்திறனை விட அதிகமாக இருக்கும். உங்களின் நினைவாற்றல் மற்றும் ஆராயும் திறனை ஆராய்ந்து பாருங்கள். தூங்கி எழுபவர்களின் மூளை செயல்பாடு உடனடியாக அதிகரிக்கும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

ஆய்வுகளின் படி பகல் நேரங்களில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது 37 சதவீதம் குறைவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும். இதன்மூலம் பகல்நேரங்களில் தூங்கினால் மாரடைப்பு ஏற்படும் என்ற கருத்து பொய்யானது என்று நிரூபிக்கப்படுகிறது.

படைப்பாற்றல்

தூக்கம் என்பது முழுமையான ஓய்வு என்று அழைக்கப்படும், இது உங்கள் மூளையுடன் தொடர்புடையது. அதன்படி நீங்கள் முழுமையாக தூங்கினால் உங்கள் மூளைக்கும் போதுமான ஓய்வும் கிடைக்கிறது. இதனால் உங்கள் கற்பனைத்திறன் அதிகரிக்கும் மேலும் உங்களின் பழைய நினைவுகளை பாதுகாக்கும். அமைதியான தூக்கம் என்பது வெற்றிக்கான சாவி ஆகும்.

நரம்பு மண்டலத்தை அமைதியாக்குகிறது

90 நிமிட தூக்கம் உங்களுக்கு அமைதியையும், நிம்மதியையும் வழங்கும். ஒருவேளை உங்களுக்கு அதிகளவு கோபம், பயம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் தோன்றினால் நரம்பு மண்டலம் அதிக வேலை செய்யும். எனவே உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதியாக்க சிறு தூக்கத்திற்கு செல்லுங்கள். இது உங்களின் நரம்பு மண்டல சோர்விலிருந்து புத்துணர்ச்சியை அளிக்கும்.

1 1538219941

 

Related posts

உங்களுக்கு தெரியுமா? ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்…!

nathan

ஆண்களுக்கு அந்த இடத்துல மச்சம் இருந்தால்… கெட்டிக்காரராம்!

nathan

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

‘உலர் கண் நோய்’ எச்சரிக்கை “கணினி, செல்போன்களை இடைவிடாமல் பார்க்க வேண்டாம்”

nathan

உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அப்புறம் என்ன நடக்குமென்று தெரியுமா?

sangika

ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே?

nathan

குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

nathan

தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகள்!…

nathan