25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ayir
முகப் பராமரிப்பு

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

தயிர் எல்லா வீட்டு சமையலறையில் பலவிதத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது இது சமையலுக்கு மட்டும் பயன்படாமல் அழகிற்கும் பல விதத்தில் கைகொடுப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதில் அதிகம் செறிந்துள்ள லக்டிக் அமிலம் பல விதமான சருமப் பிரச்சினைகளிற்கு தீர்வைத் தருகிறது.

இது சருமத்தை சூரியக் கதிர்களின் பாதிப்பில் இருந்து காப்பதுடன், கரும் புள்ளிகள் நிறம் மாறுவதுடன் இறந்த கலங்களை அகற்றி சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் ஆரோக்கியமாக பேணுகிறது.

அழகை மெருகூட்டுவதற்கு தயிரை எப்படிப் பயன்படுத்துவது?

1.சருமத்தின் நிறத்தினை அதிகப்படுத்துவதற்கு.
ஒரு தேக்கரண்டி தயிருடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துப் பகுதிகளிற்கு தடவி 30 நிமிடங்கள் விடவும். பின்பு மசாஜ் செய்தவாறு நீரினால் கழுவினால் பளபளப்பான சருமத்தைப் பெற முடியும். இதனை 2 வாரத்திற்கு தினமும் செய்வதனால் பலன் கிடைக்கும்.

2.கரும் புள்ளிகளை நீக்குவதற்கு.
2 தேக்கரண்டி பவுடராக்கிய ஒரேஞ் தோலுடன் தேவையான அளவு தயிரை சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்களின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவை செய்து வந்தால் போதுமானது.

கரும்புள்ளிகள் மீது நேரடியாக பஞ்சினால் தயிரை பூசி 15 நிமிடங்களின் பின் க்நீரினால் கழுவவும். தினமும் 2 அல்லது 3 தடவைகள் செய்வதனால் கரும்புள்ளிகள் நீங்கும்.

3.சூரியக் கதிர் பாதிப்பிலிருந்து தடுக்கும்.
பாதி கப் தயிரில் பாதி தக்காளி எடுத்து பிளண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள்ன் பின்பு நீரினால் கழுவுவதனால் சூரியக் கதிர்களின் பாதிப்புக்கள் நீங்கும். வரத்திற்கு இரு தடவைகள் இந்த முறையைப் பின்பற்றினால் போதுமானது.

அல்லது சம அளவு தேனும் தயிரும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தினமும் செய்து வருவது சிறப்பானது.

4.உலர்ந்த சருமத்திற்கு.
சிறிய துண்டு வாழைப் பழத்துடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனால் சருமம் ஈரலிப்பாக இருப்பதுடன், பளபளப்பாகவும் மாறுகிறது.

5.சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு.
3 தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி ஒலிவ், பாதாம் எண்ணெய் மற்றும் றோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பஞ்சினால் பூசவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவினால் போதுமானது. இதனை சருமம் பொலிவிழந்து போகும் நாட்களில் செய்வதனால் அழுக்குகள், இறந்த கலங்கள் நீங்கி பொலிவைப் பெற முடியும். ayir

Related posts

ஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

nathan

முக பருக்கள், கரும்புள்ளிக்கு தீர்வு தரும் பாதாம் ஃபேசியல்…! சூப்பர் டிப்ஸ்..

nathan

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?…

sangika

உங்களுக்கு தெரியுமா இதுல ஒன்ன தினமும் நைட் செஞ்சா, சீக்கிரம் வெள்ளையாவீங்க… தெரியுமா!!!

nathan

நீங்க செய்யும் இந்த தவறுகள் தான் முகப்பரு, கரும்புள்ளி வர காரணமா இருக்குன்னு தெரியுமா?

nathan

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பளப் பளப்பான சருமத்தை பெற்றுதரும் மூலிகைப் பொருட்கள்!

nathan

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan