36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

தயிர் எல்லா வீட்டு சமையலறையில் பலவிதத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது இது சமையலுக்கு மட்டும் பயன்படாமல் அழகிற்கும் பல விதத்தில் கைகொடுப்பதை யாராலும் மறுக்கமுடியாது. இதில் அதிகம் செறிந்துள்ள லக்டிக் அமிலம் பல விதமான சருமப் பிரச்சினைகளிற்கு தீர்வைத் தருகிறது.

இது சருமத்தை சூரியக் கதிர்களின் பாதிப்பில் இருந்து காப்பதுடன், கரும் புள்ளிகள் நிறம் மாறுவதுடன் இறந்த கலங்களை அகற்றி சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் ஆரோக்கியமாக பேணுகிறது.

அழகை மெருகூட்டுவதற்கு தயிரை எப்படிப் பயன்படுத்துவது?

1.சருமத்தின் நிறத்தினை அதிகப்படுத்துவதற்கு.
ஒரு தேக்கரண்டி தயிருடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துப் பகுதிகளிற்கு தடவி 30 நிமிடங்கள் விடவும். பின்பு மசாஜ் செய்தவாறு நீரினால் கழுவினால் பளபளப்பான சருமத்தைப் பெற முடியும். இதனை 2 வாரத்திற்கு தினமும் செய்வதனால் பலன் கிடைக்கும்.

2.கரும் புள்ளிகளை நீக்குவதற்கு.
2 தேக்கரண்டி பவுடராக்கிய ஒரேஞ் தோலுடன் தேவையான அளவு தயிரை சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்களின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவை செய்து வந்தால் போதுமானது.

கரும்புள்ளிகள் மீது நேரடியாக பஞ்சினால் தயிரை பூசி 15 நிமிடங்களின் பின் க்நீரினால் கழுவவும். தினமும் 2 அல்லது 3 தடவைகள் செய்வதனால் கரும்புள்ளிகள் நீங்கும்.

3.சூரியக் கதிர் பாதிப்பிலிருந்து தடுக்கும்.
பாதி கப் தயிரில் பாதி தக்காளி எடுத்து பிளண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்கள்ன் பின்பு நீரினால் கழுவுவதனால் சூரியக் கதிர்களின் பாதிப்புக்கள் நீங்கும். வரத்திற்கு இரு தடவைகள் இந்த முறையைப் பின்பற்றினால் போதுமானது.

அல்லது சம அளவு தேனும் தயிரும் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தினமும் செய்து வருவது சிறப்பானது.

4.உலர்ந்த சருமத்திற்கு.
சிறிய துண்டு வாழைப் பழத்துடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனால் சருமம் ஈரலிப்பாக இருப்பதுடன், பளபளப்பாகவும் மாறுகிறது.

5.சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு.
3 தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி ஒலிவ், பாதாம் எண்ணெய் மற்றும் றோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பஞ்சினால் பூசவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவினால் போதுமானது. இதனை சருமம் பொலிவிழந்து போகும் நாட்களில் செய்வதனால் அழுக்குகள், இறந்த கலங்கள் நீங்கி பொலிவைப் பெற முடியும். 

Related posts

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்..!

nathan

முகம் பளபளக்க/ Kasthuri Manjal

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

nathan

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

இதோ சில டிப்ஸ்… ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க வேண்டுமா?

nathan

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan

முல்தானி மெட்டி எதற்கெல்லாம் பயன்படுகிறது?தெரிந்துகொள்வோமா?

nathan

எந்த வித சருமத்திலும் முக அழகை பராமரிப்பது எப்படி ?

nathan

உங்கள் மூக்கின் அழகை பராமரிக்க டிப்ஸ்

nathan