23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
d 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

கொஞ்சம் கூட சாப்பிடமால் வெறும் வயிற்றில் இருக்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது.

*பொதுவாக நீங்கள் வெறும் வயிற்றில் இருக்கும்போது மருந்துகளை சாப்பிடக்கூடாது. அதிலும் குறிப்பாக அண்டி- இன்ஃபிலாமேட்ரி மருந்துகளை எடுக்கவே கூடாது. ஒருவேளை முன்னர் உணவு பரிந்துரைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி சரிபார்க்கவும்.

*நீங்கள் தூங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும். அதற்காக மீண்டும் பசியெடுத்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.எனவே தூங்கபோகும் முன் ஒரு கிளாஸ் பால் அல்லது ஆப்பிளை சாப்பிடலாம்.

*வெறும் வயிற்றில் மது குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இவ்வாறு செய்வதால் ஆல்கஹால் உங்கள் உடலில் அதிகளவில் கலந்து, இதயம், கல்லீரம் மற்றும் சிறுநீரகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

*வெறும் வயிற்றில் இருக்கும்போது நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்காது. இதனால் பின்னாட்களில் நீங்கள் கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள். எனவே வெறும் வயிற்றில் இருக்கும்போது முடிவு எடுப்பதே தவிருங்கள்.

*வெறும் வயிற்றில் இருக்கும்போது உங்களது உடம்பு குறைவான சக்தியை உணருகிறது. எனவே அப்போது நீங்கள் உடற்பயிற்சி செய்வது மேலும் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இதனால், உங்களின் அதிகபட்ச இலக்கினை அடைய முடியாது.

*பசிவெறியுடன் இருக்கும்போது நீங்கள் சரியான மனநிலையில் இருக்கமாட்டீர்கள். எனவே அந்தநேரத்தில் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

*நீங்கள் பசியுடன் இருக்கும்போது வாக்குக் கொடுத்தல், பேரம் பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த சமயம் உங்கள் உடலில் குறைவான சக்தியே இருக்கும். அதனால் உங்களால் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது.

*வெறும் வயிற்றில் இருக்கும்போது மளிகைபொருட்களை வாங்கச் செல்வது மிகப்பெரிய தவறு. ஏனென்றால் ஆரோக்கியமான உணவுபொருட்களை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை எடுத்து பிழை செய்து விடுவீர்கள்.

*வெறும் வயிற்றில் சுவிங்கம் சாப்பிடுவது, வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் 10-15 நிமிடங்களுக்கு மேல் சுவிங்கத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

*வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது நல்லதல்ல. இது இதயத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும். காலை உணவை தவிர்த்து, காஃபி மட்டும் அருந்தும் மக்களுக்கு இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்

d 1

Related posts

பப்பாளிக்காயின் மருத்துவ பயன்கள்

nathan

இந்த காய்கறிகள் உண்மையில் வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நூறு மருத்துவர்களுக்கு சமமான இஞ்சி… எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம் ..!

nathan

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

nathan

வயதாவதை தள்ளிப்போடும் இந்த உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

nathan