30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி சருமத்தை அழகாக்க சூப்பர் டிப்ஸ்??முயன்று பாருங்கள்…

பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி. அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யலாம்.
அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் சுலபமாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்துக் காணப்படும்.

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.

காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.

தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர நாளடைவில் முகம் பொலிவு பெறும்.

Related posts

ஜொலிக்கும் அழகு தரும் பலாப்பழ ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan

இதுதான் சீக்ரெட்டாம்! கொரியாபொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி?

nathan

உங்க உதடுகள் கருமையா? அப்ப இத படிங்க!

nathan

சிகப்பாக சில டிப்ஸ்..

nathan

உங்க முகத்துக்கு மஞ்சள் தடவும்போது நீங்க செய்யும் இந்த தவறு பல பாதிப்புகளை ஏற்படுத்துமாம் ?தெரிஞ்சிக்கங்க…

nathan