30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1525337585 5428
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி சருமத்தை அழகாக்க சூப்பர் டிப்ஸ்??முயன்று பாருங்கள்…

பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி. அதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்யலாம்.
அதுவும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் சுலபமாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்துக் காணப்படும்.

1525337585 5428உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது.

காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர அதாவது மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.

தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குளித்து வர நாளடைவில் முகம் பொலிவு பெறும்.

Related posts

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan

சுண்ணாம்பினால் எப்படி கருவளையம் மறையச் செய்யலாம் என தெரியுமா? ஒரு பாட்டி வைத்தியம்!!

nathan

உங்க முகம் பளபளக்க எளிய ஃபேஸ் வாஷ்! அதிக செலவு இல்லை…

nathan

பட்டர் ஃப்ரூட் ரகசியம்!

nathan

அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan

இதோ எளிய நிவாரணம்! சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட ஐந்து எளிய வழிமுறைகள்!!!

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika