முகப் பராமரிப்பு

தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும்?

சிலருக்கு எல்லா லட்சணமும் இருந்தாலும் ஏதோ ஒன்று குறையக தென்படும். இன்னும் சிலருக்கு முகத்தில் ஏதோ ஒரு களை தென்படும்.

துறுதுறுப்பாகவோ, அல்லது ஜொலிப்பதாகவோ ஏதோ ஒரு அழகு கூடும். இதற்கு நிச்சயம் வெளிப்பூச்சுகளால் அழகை அதிகரிக்க செய்ய முடியாது. பின் என்ன செய்ய வேண்டும்? இன்னும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகத் தசை பயிற்சி : முகத் தசைகளை சுருக்கி, விரித்து, இடம், வலம் என வாயை இழுத்து செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் பாயும். சுருக்கங்கள் வராது. முகத்தில் புதிதாய் அழகு தென்படும்.

கேரட் : தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் காலையில் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள். உடலில் மினுமினுப்பு அதிகரிக்கும்.

காலையில் சாப்பிட வேண்டிய பழம் : தினமும் காலையில் பழம் சாப்பிட்டால் இளமை அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சு, ஆப்பிள்,பப்பாளீ சாப்பிட்டு பாருங்கள். முகத்தில் ஒரு தேஜஸ் உருவாவதை பார்ப்பீர்கள்.

சுத்தமான சருமம் : கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, மருக்கள், கருமை எல்லாம் மறைந்து போய் முகம் பளபளக்கும்.

15 நாட்களுக்கு ஒருமுறை : முல்தானி மட்டியுடன் பனீர் மற்றும் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் பூசினால் முகச் சதை தொங்காது. இளமையான சுருக்கமில்லா முகம் கிடைக்கும்.

28 1485594893 4massage 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button