23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pimple scars cover 1537792137
முகப் பராமரிப்பு

உங்க முகப்பரு தழும்புகளை வேகமாக போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்..

டீனேஜ் வயதினர் சந்திக்கும் முக்கியமான ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. பருவ வயதில் முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் பருக்கள் வந்தால் செய்யும் முக்கியமான தவறான ஓர் செயல் தான், அதைக் கிள்ளி விடுவது. இப்படி கைவிரல் நகங்களால் பருக்களைக் கிள்ளி விடும்போது, அது போகும் போது கருமையான மற்றும் அசிங்கமான தழும்பை விட்டுச் செல்லும். அதோடு, சரும செல்களும் மோசமாக பாதிக்கப்படும்.

பருக்களைப் போக்குவதற்கு மார்கெட்டில் பல க்ரீம்கள் விற்கப்பட்டாலும், அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைத்தப்பாடிருக்காது. ஆனால் முற்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் அழகைப் பராமரிக்கவும், சருமப் பிரச்சனைகளைப் போக்கவும் இயற்கை வழிகளைத் தான் பின்பற்றினார்கள். அதற்கு ஏற்ப இயற்கையும் நம் சரும பிரச்சனைகளைப் போக்கும் வகையில் பல பொருட்களை நமக்கு கொடுத்துள்ளது. அதுவும் வீட்டுச் சமையலறையிலேயே அந்த அனைத்துப் பொருட்களும் உள்ளன.

பருக்கள் ஏன் வருகிறது? சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக எண்ணெயை உற்பத்தி செய்யும் போது, அழுக்குகள் அந்த எண்ணெயுடன் சேர்ந்து சருமத் துளைகளை அடைத்து பருக்களை உண்டாக்குகின்றன. இந்த பருக்கள் பொதுவாக மறையும் போது தழும்புகளை விட்டுச் செல்லும். இந்த தழும்புகள் ஒருவரது அழகைக் கெடுக்கும் படி இருக்கும். இந்த கட்டுரையில் முகத்தில் உள்ள பருக்களின் தழும்புகளை வேகமாக போக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேக்கிங் சோடா

ஒரு சிறிய பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகள் மீது தடவுங்கள். சில நிமிடங்கள் இந்த கலவையை அப்படியே ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை என செய்து வந்தால், மிகவும் வேகமாக பருக்கள் விட்டு சென்ற தழும்புகள் மறைந்துவிடும்.

தேன்

தேன் சருமத்தில் பல மாயங்களை உண்டாக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். ஆனால், இந்த பானத்திற்கு இணையான பலன் வேறு எந்த பானத்திலும் இல்லை. ஆனால் இந்த தேனை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தினால், பருக்களால் வந்த தழும்புகள் வேகமாக மறையும். அதற்கு முதலில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இதனால் சருமத் துளைகள் விரிவடையும். பின் தேனை மெதுவாக பரு தழும்புகள் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். பின்பு ஐஸ் கட்டியைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமத் துளைகள் மீண்டும் மூடிக் கொள்ளும்.

வேக வைத்த கேரட்

பருக்கள் பரிசாக கொடுத்துச் செல்லும் தழும்புகளைப் போக்க நன்கு வேக வைத்த கேரட் உதவியாக இருக்கும். அதற்கு வேக வைத்த கேரட்டை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 15 நிமிடம் ஊற வையுங்கள். பின் முகத்தை பாலால் கழுவி, பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

வெள்ளரிக்காய்

பருக்களால் வந்த தழும்புகளைப் போக்குவதற்கு வெள்ளரிக்காய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு துண்டு வெள்ளரிக்காயை எடுத்து நேரடியாக முகத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் வெள்ளரிக்காய் சாறு தழும்புகளைப் போக்க உதவுவதோடு, முகத்தின் புத்துணர்ச்சியும் மேம்படும். ஒருவர் முகத்தை வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு தினமும் ஒரு முறை கழுவி வந்தால், தழும்புகள் நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது பருக்கள் விட்டுச் செல்லும் அசிங்கமான மற்றும் கருமையான தழும்புகளைப் போக்க உதவியாக இருக்கும். அதற்கு ஒரு தக்காளித் துண்டை, பாதிக்கப்பட்ட இடத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் 15-20 நிமிடம் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் தவறாமல் செய்து வந்தால், தழும்புகள் காணாமல் போய்விடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையிலும் தக்காளியைப் போன்றே வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இது மிகச்சிறந்த ப்ளீச்சிங் தன்மையையும் கொண்டது. எனவே இது பருக்களின் தழும்புகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை கருமையான பரு தழும்புகளின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பருக்கள் மற்றும் அதன் தழும்புகள் நீங்கி, முகத்தின் பொலிவும் மேம்பட்டுக் காணப்படும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஒருவர் தினமும் காலை உணவின் போது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸைக் குடித்து வருவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அப்படி ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்கும் போது, அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். வேண்டுமானால் ஆரஞ்சு தோலை வெயிலின் நிழலில் உலர்த்தி பொடி செய்தும் பயன்படுத்தலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவலாம் அல்லது நற்பதமான வெந்தய கீரையை இரவு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம். இதனால் சருமத்தில் உள்ள கருமையான தழும்புகள் மறைவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாகி, பொலிவான சருமத்தைக் கொடுக்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து நன்கு அடித்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தழும்புகள் மறைவதோடு, சரும நிறமும் மேம்பட்டு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

pimple scars cover 1537792137

 

 

Related posts

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க

nathan

உங்கள் சருமத்தில் உண்டாகிற இறந்த செல்களை நீக்கி பளிச்சிட செய்ய இதை செய்யுங்கள்.

sangika

கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி

nathan

பெண்களே தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

nathan

என்ன தான் செஞ்சாலும் இந்த பரு போகாம தொல்லை பண்ணுதா? இதை முயன்று பாருங்கள்

nathan

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

nathan

சூப்பர் டிப்ஸ்! உங்க முகம் ஃபிரெஷ்ஷா, பளிச்சுன்னு இருக்க இந்த ஃபேஸ் ப்ளீச் பயன்படுத்துங்க!

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika