முகப் பராமரிப்பு

பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

திருமணம் என்பது ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.
எனவே அந்த நாளில் பளிச்சன்று தெரியவேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக கவனம் செலுத்துவர்.

இதற்கு நவீனமாக தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் அழகு நிலையங்களை நாடுவதுண்டு.

ஆனால் அவ்வாறு சென்று பணத்தை வீணடிக்காமல், வீட்டிலேயே இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு அழகைப் பராமரித்தால், சருமத்தின் அழகு அதிகரிப்பதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும் அழகுப் பராமரிப்பில் அதிகம் பயன்படும் முட்டையைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு மற்றும் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.

எல்லாரும் போட்டுக்கலாம்
முட்டையானது அனைத்து வகையானது சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு அழகுப் பராமரிப்பு பொருள் என்பதால் அதை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பயன்படுத்தலாம்.

மேலும் முட்டையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளானது உடனடியாக நீங்கும்.

பளிச்சென்று இருக்க
முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் முகத்தை பால் கொண்டு ஒருமுறை துடைத்து எடுத்தப் பிறகு கலந்து வைத்துள்ள முட்டை கலவையை, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரம் 2-3 முறை செய்து வந்தால், முகம் பளிச்சென்று ஜொலிப்பதைக் காணலாம்.

கருமையைப் போக்கி சிகப்பழகை பெறணுமா
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று இருக்கும்.
பட்டு போன்ற சருமத்துக்கு

1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடந்து செய்து வந்தால் சருமம் மென்மையாகிவிடும்.

பிரஷ்ஷான சருமத்துக்காக
இந்த ஃபேஸ் பேக் மூலம் சருமத்தில் தங்கியுள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகளானது முற்றிலும் வெளிவந்துவிடும்.
இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன், 7-8 ஸ்ட்ராபெர்ரி, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் சிறு துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவை தேவை.

பின் ஒரு பௌலில் ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பௌலில் முட்டை, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் ஒன்று சேர்த்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
egg facial 005 300x208

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button