30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஷியல் டிப்ஸ்

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ் இவை.நிறைய டிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது.

இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி

செய்யுங்கள்.

1. பாதாம் எண்ணெய்

உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது.பருக்கள் குழி

அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும்.ஆயில் கிடைக்காவிடில்

பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.

2.பச்சை நிற ஆப்பிள்

பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம்,அரிப்பு,வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.

3.கடலை மாவு

கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல்

போய்விடும்.பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் நிறம் கூடும்.

4.தேன்

தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம்

பளபளப்பாகவும்,மிருதுவாகவும் ஆகும்.

5.கடலை எண்ணெய்

1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால்

பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.

6.பால்

பரு,கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு காய்ச்சிய 1 கப் பால் குளிர்ந்த பிறகு 1/2

எலுமிச்சையை பிழிந்து,கலந்து கழுவினால் நல்லது.

7.தயிர்

கோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.

8.மஞ்சள்

கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்

Related posts

ஆண்மை குறைவை போக்க, இத செய்து வாங்க…

sangika

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

nathan

ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்

nathan

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒருங்கே கொண்ட சிகிச்சைகளில் இந்த எண்ணெய் குளியலுக்கு முக்கிய பங்கு உள்ளது.

sangika

முகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா?

nathan

செம்ம மாஸான கெட்டப்பில் பிக்பாஸிற்கு வரும் சிம்பு -வெளிவந்த தகவல் !

nathan

உங்க கன்னம் கொழுகொழுவென்று இருக்க வேண்டுமென ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

nathan