சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சில உணவகங்கள், பானங்கள் சாப்பிடக்கூடாது. அதற்கென்று வயிறு நிறையவும் சாப்பிட முடியாது. அளவாக சாப்பிட வேண்டும். காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத அயிட்டங்கள் என்னென்ன..?
வெறும் வயிற்றில் இருக்கும் போது மருந்துகள் சாப்பிடக்கூடாது. ஒரு வேலை உணவுக்கு முன் மருந்துகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பின் சாப்பிடவும்.
மது அருந்துதல் கூடாது, வெறும் வயிற்றில் மது குடித்தால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் அதிக பாதிப்புகள் ஏற்படும்.
தீவிரமான உடற்பயிற்சி செய்யக்கூடாது, நாம் வெறும் வயிறாக இருக்கும் போது குறைவான சக்தியே நம் உடலில் இருக்கும். அந்த நேரம் அதீத உடற்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் சோர்வை அடையும்.
பசியுடன் இருக்கும் போது எந்த கோபங்களும் வீண் வாதங்களையும் தவிர்க்க வேண்டும். அப்போது மனது ஒரு நிலையில் இருக்காது அதனால் அப்போது எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
அதீத திறமை, பேச்சாற்றல் வெறும் வயிற்றில் இருக்காது. அதனால் வாக்குகள் எதனையும் உறுதியாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
சுவிங்கம் சாப்பிடக்கூடாது அதனை சாப்பிடுவதால் வயிற்றில் வீக்கம் ஏற்படும். மேலும் அதனை 10-15 நிமிடங்களுக்கு மேல் சுவிங்கம் வாயில் வைத்திருக்க வேண்டாம். அதனால் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடும்.
காபி குடித்தால் அதிக எரிச்சல் உண்டாக்கும். இதனால் காலை உணவு சாப்பிடவே முடியாது. எரிச்சல் ஏற்படுவது மட்டுமல்லாமல் செரிமான பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.