தற்போதைய உலகின் கொடிய நோயாக கருதப்படும் நோய்களில் ஒன்றான நீரிழிவு நோய்க்கு கூட அக்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை தான் கையாண்டுள்ளனர்.
அந்தவகையில் நீரிழிவு நோயை விரட்டும் ஆயுர்வேத மருத்துவங்கள் சிலவற்றை பார்போம்.
10 வேப்பிலை கொழுந்து இலைகள் மற்றும் 10 துளசி இலைகள் எடுத்து கொண்டு நன்கு அரைத்து அவற்றின் சாற்றை மட்டும் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்குமாம்.
- பாகற்காய் சாற்றை தினமும் 30 ml குடித்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாவல் பழங்களின் இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
- நாவல் பழங்களின் விதைகளை பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை தீர்க்குமாம்.
- தினமும் இவற்றை வெது வெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகுமாம்.
- ஆலமர பட்டையை 20 gm எடுத்து கொண்டு 4 கிளாஸ் நீரில் கொதிக்க விடவும். பின் 1 கிளாஸ் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.
- தினமும் 3 டீஸ்பூன் இலவங்க பொடியை 1 லிட்டர் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும்.
- தினமும் 20 ml நெல்லி சாற்றை குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு சிறந்த மருந்தாகும். மேலும், இது ரத்தத்தை சுத்தம் செய்யவும் பயன்படும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் இரவு முழுவதும் மிதமான நீரில் ஊற வைத்த வெந்தயத்தை, அடுத்த நாள் எடுத்து அரைத்து வடிகட்டி குடித்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
- மஞ்சள் மற்றும் பிரியாணி இலை பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அவற்றுடன் 1 ஸ்பூன் கற்றாழை சேர்த்து கலந்து இவற்றை மதிய மற்றும் இரவு உணவு உண்ணுவதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலனை அடையலாம்.