தலை முதல் பாதம் வரை எல்லாவற்றிற்கும் சிறந்த மருந்து எது தெரியுமா? எல்லா வகையான பழங்களிலும் ஒரு தனி சிறப்பு இருக்கத்தான் செய்யும். பழங்கள் என்றாலே அவை உடலிற்கு மிகவும் நன்மையே தர கூடியவை. பொதுவாக அதிக ஊட்டசத்துக்கள் உள்ள உணவுகளையே நாம் உண்ணுவோம். அந்த வகையில் பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களில் எண்ணற்ற நலன்கள் இருப்பதால் பெரியர்வகள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
ஆனால், ஒரு சில பழங்கள் மட்டுமே முடி மற்றும் சருமத்தின் அழகை மேம்படுத்தும். இந்த பதிவில் நாவல் பழம் எவ்வாறு உடல் அழகிற்கு உதவுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நலம் தரும் நாவல்..! நம் பள்ளி பருவத்தில் ஒரு சில பழங்களை நம் பள்ளி வாசலில், ஒரு வயதான பாட்டி அல்லது தாத்தா விற்று கொண்டிருப்பார். ஈச்சப்பழம், இலந்தை பழம், கொடுக்களிக்கா போன்றவை அவற்றில் மிகவும் பிரபலமானவை . அந்த வகையில் நாவல் பழம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இது அதிக நன்மைகளை தர கூடியது.
சத்து நிறைந்த நாவல்…! பொதுவாக சர்க்கரை நோயை மட்டும்தான் நாவல் குணப்படுத்தும் என்ற எண்ணம் மக்களிடம் பரவி உள்ளது. ஆனால், இத்துடன் பல்வேறு நலன்களை இது தர கூடியது. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்… வைட்டமின் சி 18 mg கால்சியம் 15 mg மெக்னீசியம் 35 mg கரோட்டின் 48 ug இரும்பு சத்து 1.41 mg நீர்சத்து 84.75 gm பாஸ்பரஸ் 15 mg சோடியம் 26.2 mg
முக பருக்களுக்கு டாட்..! முகத்தின் அழகை கெடுப்பதில் இந்த முக பருக்கள் முதல் இடத்தில் உள்ளது. முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் இவற்றை உருவாக்கிக்கின்றன. இது பலருக்கு முக அழகை பாதித்து விடுகிறது. இதனை சரி செய்ய நாவல் ஒரு அருமையன தீர்வாக உள்ளது.
தேவையானவை :- நாவல் பசும்பால்
செய்முறை :- முதலில் நாவல் பழத்தை நன்கு கழுவி, விதையை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து பால் மற்றும் இதன் விதையை சேர்த்து நன்கு அரைத்து கொண்டு முகப்பரு இருக்கும் இடத்தில் பூசவும். இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் விரைவில் சரியாகும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு… முகம் முழுக்க எண்ணெய் வடிகிறதா..? இது உங்கள் முழு அழகையும் கெடுத்து விடுகிறதா…? இனி கவலையை விட்டு தள்ளுங்கள். இந்த நாவல் பழங்கள் இவற்றிற்கு சிறந்த பயனை தருகிறது. இவற்றில் உள்ள வைட்டமின் சி முக அழகை பராமரிக்க உதவும். அதற்கு இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.
தேவையானவை :- நெல்லிக்காய் நாவல் பார்லி மாவு ரோஸ் நீர்
செய்முறை :– முதலில் நாவல் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து அரைத்து கொள்ளவும். அடுத்து நெல்லிக்காய் தூள், பார்லி மாவு கலந்து கொண்டு அவற்றுடன் ரோஸ் நீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால், முகத்தின் எண்ணெய் பசை நீங்கும். மேலும் சருமத்தின் எண்ணெய் தன்மை குறைந்து ஈரப்பதமாகும்.
முக சொரசொரப்புக்கு… பலரின் முக சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இதனால் முகத்தில் சொர சொரப்புகள் ஏற்பட கூடும். இதனை சரி செய்ய இந்த அழகு குறிப்பு உதவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தி வாருங்கள்.
தேவையானவை :- ஆரஞ்ச் தோளில் பொடி பாதம் எண்ணெய் நாவல் விதை பொடி ரோஸ் நீர்
செய்முறை :- நாவல் பொடி, ஆரஞ்ச் தோலின் பொடி ஆகியவற்றை நன்கு கலந்து கொண்டு அவற்றுடன் பாதம் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். பிறகு இந்த கலவையுடன் சிறிது ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம் பொலிவு பெரும். மேலும் முகம் அழகாக மின்னும்.
மென்மையான பாதத்திற்கு… பாதங்கள் நம் சிறந்த நண்பர்கள். இவர்கள் இல்லையென்றால் நம்மால் எந்த இடத்திற்கும் போக இயலாது. நாம் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு செல்லும் பாதங்களை நாம் பராமரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு இந்த நாவல் பேக் நன்கு உதவும்.
தேவையானவை :- நாவல் பழம் தக்காளி சாறு எலுமிச்சை சாறு
செய்முறை :- முதலில் நாவல் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து, அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சேர்த்து பாதத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் அழுக்குகள் நீங்கி பாதங்கள் சுத்தம் ஆகும். அத்துடன் அழகான பாதத்தையும் பெறலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.