29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ir 1536149651
முகப் பராமரிப்பு

முகத்தில் வளரும் முடியை எளிதில் நீக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்….

முகத்தில் வளரும் முடியை எளிதில் நீக்க வேண்டுமா?பெண்களின் சருமம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம். இந்த ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றியில் ரோமம் அதிகளவில் இருக்கும். இந்த ரோமங்களை நீக்க பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, அந்த ரோமங்களை நீக்குவார்கள்.

சருமத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் த்ரெட்டிங், வேக்ஸிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் இப்படி பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்குவதற்கு சில இயற்கை வழிகளும் உள்ளன என்பது தெரியுமா? உங்களுக்கு அந்த இயற்கை வழிகளைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

கீழே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கும் 2 அற்புதமான இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றி, அசிங்கமான தோற்றத்தை அளிக்கும் முடியை நீக்கி, அழகாக மாறுங்கள்.

இந்தியன் நெட்டில் மற்றும் மஞ்சள் நெட்டில் என்பது தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி. இது சருமத்தில் குறிப்பாக முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் இது முகத்தில் வளரும் முடியின் அடர்த்தியை குறைப்பதோடு, நாளடைவில் முடியின் வளர்ச்சியையே தடுத்துவிடும். மஞ்சள், சருமத்தின் நண்பன் என்று கூறலாம். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், இதை நெட்டில் செடியுடன் சேர்த்து பயன்படுத்தினால் ஒரு நல்ல பலனைக் காணலாம்.

தேவையான பொருட்கள்: * இந்தியன் நெட்டில் இலைகள் – 1 கையளவு * மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை: * நெட்டில் இலைகளை நீரில் கழுவி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * அதன் பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் வளரும் தேவையற்ற முடியுள்ள பகுதியில் தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவவும். * இந்த முறையை இரவு தூங்கும் முன் மேற்கொண்டு, மறுநாள் காலையில் கழுவினால், இன்னும் சிறப்பான பலனைக் காணலாம். * முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீங்க வேண்டுமானால், இந்த முறையை தினமும் என 4-6 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள்.

ஓட்ஸ் ஸ்கரப் ஓட்ஸ் மிகச்சிறப்பான ஒரு அழகு பராமரிப்பு பொருள் எனலாம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் நீக்க உதவியாக இருக்கும். பொதுவாக ஸ்கரப் சருமத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க பயனுள்ளதாக இருக்கும். அதிலும் ஓட்ஸ் கொண்டு ஸ்கரப் செய்தால், சருமத்தில் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுக்கலாம். அதுவும் ஓட்ஸ் உடன், சருமத்திற்கு பயனளிக்கும் இதர பொருட்களையும் சேர்த்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், தேவையற்ற முடி நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: * ஓட்ஸ் பொடி – 1/2 டீஸ்பூன் * தேன் – 1 டேபிள் ஸ்பூன் * எலுமிச்சை சாறு – 6-8 துளிகள்

தயாரிக்கும் முறை: * ஒரு பௌலில் ஓட்ஸ் பொடி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * அதன் பின் நீர் பயன்படுத்தி, 2-5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். அதுவும் முடி வளரும் இடத்தில் முடியின் வளர்ச்சிக்கு எதிர் திசையை நோக்கி ஸ்கரப் செய்ய வேண்டும். முக்கியமாக மிகவும் கடினமாக ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும். * பின்பு நீரால் முகத்தைக் கழுவவும். * இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை என தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைப்பட்டிருப்பதைக் காணலாம்.

ir 1536149651

Related posts

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்

nathan

ரொசாசியாவிற்கான 10 சிறந்த தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

கறுப்பை கொண்டாடுவோம்!

nathan

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

nathan

உங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் பழங்கள் என்ன தெரியுமா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ்

nathan

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி?

nathan