36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா பாதாம் தோலை அழகுக்காக இப்படி யூஸ் பண்ணலாமா!

பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது.

பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம். 10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்.

சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.

பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.-News & image Credit: maalaimalar

Related posts

உங்களுக்கு எண்ணெய் வழியும் இமைகளா? அதை சீராக்க உதவும் 6 குறிப்புகள்!

nathan

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்க டிப்ஸ்!………

nathan

உங்களின் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா? அடர்த்தியை சரிசெய்யலாம்

nathan

முகப்பருவிற்கு நல்ல தீர்வை வழங்கும் யுனானி மருத்துவம் !….

sangika

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

nathan

உங்களுக்கு தெரியுமா க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

nathan

முகப்பருக்கள், தோல் சுருக்கம் போக்கி முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் கொத்தமல்லி!

nathan

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika