23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
8 1536133319
முகப் பராமரிப்பு

நீங்க கருப்போ சிகப்போ ஆனா பார்க்க பளபளன்னு இருக்கணுமா? அப்ப இத படிங்க!

இயற்கையாகவே உங்கள் முகம் எப்பொழுதும் பளபளக்க விரும்பினால் பெண்கள் தங்கள் முகத்தை முறையாக பேண வேண்டும். நாம் என்ன தான் நிறைய அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு முகத்தை மெருகேற்றினாலும் இயற்கை பொருட்கள் தரும் அழகுக்கு ஈடாக முடியாது. மேலும் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத பியூட்டி முறையும் கூட.

அடிக்கடி அழகு நிலையங்கள் சென்று வர வேண்டிய தேவையும் இல்லை. வீட்டில் இருந்த படியே உங்கள் அழகு உங்கள் கையில் என்று இருக்கலாம். அப்படிப்பட்ட பலனை அளிக்க கூடியது தான் இந்த பூசணிக்காய் பேஷியல். போஷாக்குகள்

சரும நிறம் இதுவரை சமையலில் பயன்படுத்திய பூசணிக்காய் இப்பொழுது உங்கள் அழகுத் துறையிலும் அடியெடுத்து வைக்கப் போகிறது. காரணம் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். இதில் ரெட்டினோயிக் அமிலம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டீன், விட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற நமது சருமத்திற்கு தேவையான அனைத்து போஷாக்குகள் இதில் உள்ளன. சரி வாங்க இப்பொழுது இதை எப்படி பயன்படுத்தி பலன் பெறலாம் என்பதை பார்ப்போம்

பூசணிக்காய் மற்றும் ஜாதிக்காய் மாஸ்க் தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் பூசணிக்காய் சாறு 1 /4 டேபிள் ஸ்பூன் ஜாதிக்காய் 1 டீ ஸ்பூன் தேன் 1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்

பயன்படுத்தும் முறை

 

ஒரு பெளலில் பூசணிக்காய் சாறு, கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிது ஜாதிக்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும். மிதமான பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் இந்த கலவையை தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். இதன் மூலம் நல்ல பளபளப்பான பளிச்சென்ற முகத்தை பெறலாம்.

எப்படி வேலை செய்கிறது இந்த பூசணிக்காய் பழத்தில் உள்ள இயற்கை என்ஜைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம், ஜாதிக்காய், ஆப்பிள் சிடார் வினிகர், தேன் சேர்த்து உபயோகிப்பதால் சருமம் மென்மையாகவும் மினுமினுப்பாகவும் இருப்பதோடு சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது

சருமத்தை மீளச்செய்தல் தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் பூசணிக்காய் சாறு 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 முட்டை 3 சொட்டுகள் ப்ரான்கின்சென்ஸ் எஸன்ஷியல் ஆயில்

பயன்படுத்தும் முறை முட்டையை உடைத்து பூசணிக்காய் சாறுடன் நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் 2 டீ ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். கொஞ்சம் சில சொட்டுகள் ப்ரான்கின்சென்ஸ் எஸன்ஷியல் ஆயில் சேருங்கள். இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் வேலை செய்யும் விதம் தேன் உங்கள் முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு முகத்தில் உள்ள கருமையை போக்குகிறது. ப்ரான்கின்சென்ஸ் ஆயில் அஸ்ட்ரிஜெண்ட் மாதிரி செயல்பட்டு முகத்தில் உள்ள பருக்களை போக்குகிறது. முட்டை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. உங்களுக்கு வறண்ட செதில் போன்ற சருமம் இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவை மாஸ்க்கில் கலந்து கொள்ளுங்கள். எண்ணெய் பசை சருமம் என்றால் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேருங்கள்.

பூசணிக்காய் மற்றும் கிளைக்காலிக் அமில மாஸ்க் தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் பூசணிக்காய் 11/2 டீ ஸ்பூன் கிளைக்காலிக் அமிலம் 1/4 டீ ஸ்பூன் ஜாதிக்காய்

பயன்படுத்தும் முறை பூசணிக்காய் சாறுடன் கிளைக்காலிக் அமிலத்தை சிறுதளவு சேர்த்து கொள்ளுங்கள். 1/4 டீ ஸ்பூன் ஜாதிக்காய் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வேலை செய்யும் விதம் உங்கள் சருமத்தை புதுப்பிக்க நீங்கள் நினைத்தால் கிளைக்காலிக் அமிலம் சிறந்ததாகும். சரும நிற மாற்றம், கரும்புள்ளிகள், சீக்கிரம் வயதாகுல் போன்றவற்றை சரி செய்கிறது.

பூசணிக்காய் மற்றும் வால்நட்ஸ் தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் பூசணிக்காய் சாறு 2 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பவுடர் 1 டீ ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட் 1/8 டீ ஸ்பூன் பட்டை பொடி

பயன்படுத்தும் முறை ஒரு கண்ணாடி பெளலில் பூசணிக்காய் சாறு, வால்நட்ஸ் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் தேன் மற்றும் தயிரை சேருங்கள். இதில் கொஞ்சம் பட்டை பொடியை சேர்க்கவும். இறந்த சருமத்தின் மீது இந்த ஸ்க்ரப்பை வட்ட இயக்கத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

வேலை செய்யும் விதம் இந்த ஸ்க்ரப் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு ஆழமான புத்துயிரை கொடுக்கிறது. தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் சருமத்தில் உள்ள கிருமிகளை போக்கி சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது.

பூசணிக்காய் மற்றும் காபி பேஸ் மாஸ்க் 1 டேபிள் ஸ்பூன் பூசணிக்காய் சாறு 3 டேபிள் ஸ்பூன் யோகார்ட் 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் 1/2 டீ ஸ்பூன் தேன்

பயன்படுத்தும் முறை பூசணிக்காய் சாற்றுடன் காபி பவுடரை கலந்து கொள்ளவும். யோகார்ட் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வரை வைத்து இருக்கவும்

வேலை செய்யும் விதம் காபி பவுடர் உங்கள் சருமத்தை புத்துயிர் பெறச் செய்கிறது. யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை நீக்குகிறது. பூசணிக்காய் உங்களுக்கு அழற்சி என்றால் சிறுதளவு சருமத்தில் தடவி ஒத்துக் கொள்கிறதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்கள் பூசணிக்காய் பேஸ் மாஸ்க்கை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த விரும்பினால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்தி விடுங்கள். உங்கள் சருமம் காம்பினேஷன் சருமம் என்றால் வெவ்வேறு பூசணிக்காய் பேஸ் மாஸ்க்கை கூட பயன்படுத்தி பலன் பெறலாம் பூசணிக்காய் மற்றும் பட்டை சேர்ந்த கலவை அடைத்த சரும துளைகளை திறக்கிறது, கரும்புள்ளிகளை போக்குகிறது, வெள்ளை புள்ளிகள் போன்றவற்றையும் போக்குகிறது. சென்ஸ்டிவ் சருமம் மற்றும் காயமடைந்த சருமத்தில் பட்டை பயன்படுத்த வேண்டாம்.

இந்த பூசணிக்காய் பேஸ் மாஸ்க்கள் கண்டிப்பாக உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்றும். அதுமட்டுமல்லாமல் விலை குறைந்த இந்த பேஸ் மாஸ்க்கை வீட்டில் தயாரித்தே பலன் பெறவும் முடியும்.

8 1536133319

Related posts

உங்களுக்கு விரைவில் தடிமனான புருவம் கிடைக்க டாப் 7 கைவைத்தியங்கள்!! தூங்கறதுக்கு முன்னாடி இத செய்ங்க!!

nathan

முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

லிப்ஸ்டிக் உபயோகித்தால் இந்த பிரச்சனைகள் வருமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

கருவளையத்தை எளிதில் விரட்டும் மோர்!! 5 அழகுக் குறிப்புகள்!!

nathan

பளிச்சென மின்ன வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகள் முதல் பருக்கள் வரை, உடனே தீர்வுக்கு கொண்டு வர #நச்சுனு 7 டிப்ஸ்..!

nathan

தேவதையாய் மாற்றப் போகும் பைனாப்பிள் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…

nathan