உங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் வீட்ல இருந்தா போதும்… எவ்ளோ அசுத்தமாக காற்றையும் சுத்தமாகிடும்…லட்சக்கணக்கில் வருமானம் வந்தாலும் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தது போல் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியவில்லை. ஏனெனில் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
சுற்றுச்சூழல் மாசுபட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதனால் மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிக அடிப்படையாக இருக்கின்ற சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், ஆரோக்கியமான உணவுகள் இதுதான் முக்கிய காரணம்.
சுத்தமான காற்று காற்று தான் நாம் உயிர் வாழ்வதற்கு மிக அடிப்படையான விஷயம். அதனால் தான் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு பிராண வாயு என்று பெயர். அந்த காற்று சுத்தமாக இல்லையென்றால், நுரையீரல் பிரச்னைகள், மூச்சுத் திணறல் போன்ற பல பிரச்னைகள் உண்டாகி, நம்முடைய வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கு மிக முக்கிய காரணமே நாம் இயற்கை வளங்களை கொஞ்சம் கொஞசமாக அழிக்க ஆரம்பித்து விட்டதுதான். அதிலும் குறிப்பாக, காடுகளையும் மரங்களையும் வெட்டி வீழ்த்துவது தான் இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
என்னதான் செய்யலாம்? இதெல்லாம நம் எல்லோருக்குமே தெரிந்த கதை தானே. நகரமயமாகிவிட்ட சூழலில் மரங்கள் இல்லாத, வாகனங்கள் பெருகி விட்ட இன்றைய வாழ்க்கை முறையில் நம்மால் இயற்கையான காற்றை சுவாசிக்கவே முடியாதா? என்ன தான் செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இன்னொரு யோசனை இருக்கிறது. மரம் தான் நாம் நடுவதில்லை. குறைந்தபட்சம் நம் எல்லோருக்கும் நம்முடைய வீட்டை மட்டும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான அழகழகான பூந்தொட்டிகளை வாங்கி வைப்போம். அதில் ஏதாவது ஒருசெடியை வைப்பதைக் காட்டிலும், நாம் சுவாசிக்கும் காற்றினை சுத்தப்படுத்திக் கொடுக்கின்ற சின்ன சின்ன செடிகளை வைக்கலாமே. அதன்மூலம் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமானதாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி என்னென்ன செடிகளை வைத்தால் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாகிக் கொடுக்கும்.
பீஸ் லில்லி வீட்டுக்குள் செடியில் பூ மலர்ந்திருந்தால் அதை பார்ப்பதற்கே மனதுக்குள் ஒருவித குதூகலமும் புத்துணர்ச்சியும் உண்டாகும். அதில் மிக முக்கியமான ஒன்று தான் பீஸ் லில்லி மலர். இந்த பீஸ் லில்லி மலர் சிப்பியின் வடிவத்தில் இருக்கும். காற்றில் இருக்கும் ஃபார்மால்டிகைடுகளை நீக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பீஸ் லில்லி. அதோடு பென்சைனையும் நீக்கும். மிகக்குறைந்த வெளிச்சம் இருந்தாலே இந்த செடி வளர்வதற்குப் போதுமானதாக இருக்கும்.
கற்றாழை செடி கற்றாழையில் பல வகைகள் உண்டு. சோற்றுக் கற்றாழை, ஸ்நேக் பிளாண்ட் என பல வகையுண்டு. அவை எல்லாமே மருத்துவ குணங்கள் மிக்கவை தான். அதில் சோற்றுக் கற்றாழையின் அருமையான மருத்துவ குணங்கள் பற்றி நம் எல்லோருக்குமோ தெரியும். அதைவிடவும் நமக்குத் தெரியாத ஒரு விஷயம் ஸ்நேக் பிளாண்ட் பற்றியது தான். இது நிறைய வீடுகளில் அழகுக்காகவே வளர்க்கிறோம். ஆனால் அது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகமாகக் கொடுக்கும். அசுத்தமான காற்றினையும் சுத்தப்படுத்தி, தூய்மையான காற்றை நமக்குக் கொடுக்கும்.
டெய்சி மலர் டெய்சி மலரும் நிறைய வீடுகளில் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும். பூங்கொத்துக்களில் மிகப் பிரதானமான வைக்கப்பட்டிருக்கும் மலர்களில் ஒன்று தான் டெய்சி. இது காற்றில் உள்ள அசுத்தத் தன்மையை நீக்கி, சுத்தமான ஆக்சிஜனை நமக்குக் கொடுக்கும். இந்த பூவை நீங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறீர்கள் என்றால், பினாயில், .புளோர் கிளீனர், வேக்கம் கிளீனர் என எதுவுமே இல்லாமல் வீட்டைச் சுத்தம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். அந்த அளவுக்கு காற்றில் கலந்திருக்கும் ட்ரைகோளோரோ எத்திலீனை ரிமூவ் செய்யும் ஆற்றல் கொண்டது. இது நம்முடைய சாமந்தி மலரின் வகையைச் சேர்ந்தது.
அசிலியா அசிலியா மலர் கொடி போன்று படரும் தன்மை கொண்டது. பெரும்பாலும் இது மேலை நாடுகளில் தான் அதிகமாக வளர்க்கப்பட்டு வந்தது. இப்போது நம் நாட்டிலும் எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் இது வீட்டின் காம்பவுண்ட் (சுற்றுச்சுவர்) களில் தான் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்த கொடி பெரும்பாலும் கெமிக்கல்களை நீக்கக்கூடிய தன்மை கொண்டது
இங்கிலீஷ் ஐவி இந்த கொடியை நிறைய வீடுகளில் அழகுக்காக முகப்பில் படர விட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இது காற்றில் உள்ள ஃபார்மால்டிகைடு மற்றும் அசுத்தத்தை நீக்கக்கூடியது. வறட்சியிலும் எளிதாக வளரக் கூடிய தன்மை கொண்டது. கோவைக்கொடியைப் போன்று இருக்கும். எல்லா பருவத்திலும் தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. வெளிச்சம் குறைவாக இருக்கும் பகுதிகளில் கூட இது எளிதாக வளர்ந்து விடும். வீட்டில் உள்ள மற்ற பூச்செடி அல்லது மரம் ஏதாவற்றில் கூட படர விடலாம்.
ரெட்எட்ஜ்டு டிராகனா மிக அழகான, பார்த்ததும் நம்மைக் கவரக் கூடிய செடிகளுள் இதுவும் ஒன்று. இந்த செடியானது கிட்டதட்ட 15 அடி உயரம் அளவுக்கு வளரக்கூடியது. வீட்டில் காலியாக உள்ள இடத்தை செடி வைத்து நிரப்ப வேண்டும் என்று நினைத்தால், இந்த ஒரு செடியை வைத்தால் போதும். இது காற்றில் உள்ள டாக்சின்களை வெளியேற்றும். சைலின், ட்ரைகுளோரோ எத்திலின் மற்றும் பார்மால்டிஹைடுகளைக் காற்றிலிருந்து நீக்கும் தன்மை கொண்டது. சூரிய ஒளியில் நன்கு வேகமாக வளரும் தன்மை கொண்டது.