25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
open fridge
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்குதான் இந்த விஷயம் இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க!!

உங்களுக்குதான் இந்த விஷயம் இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க!! இன்று பெரும்பாலான வீட்டில் அலுவலகத்தில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. எந்த உணவையும் ப்ரிட்ஜில் வைக்கலாம், அவை நீண்ட நாட்கள் கெடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறானது. ஃப்ரிட்ஜில் வைத்து அவற்றை மறுநாளோ அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ சாப்பிடுவது மிகவும் தவறான பழக்கம்.

எந்த உணவையும் மறு முறை சூடாக்கும் போது அதிலிருக்கும் சத்துக்கள் எல்லாமே அழிந்திடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எத்தகைய அவசர சூழல் ஆனாலும் சில பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

வாழைப்பழம் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். வெளியில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

தேன் இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.

அவகோடா அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்

சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும்.

மூலிகைகள் மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், உலர்ந்து போகாமல் இருக்கும்

வெங்காயம் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது. அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும்.

பிரெட் பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு ஆகவே ஆகாதவை. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மெதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெடும். ஆகவே அதிக வெப்பமில்லாத சமையலறை அலமாரிகளிலேயே டிபன் பாக்ஸ்களில் மூடிவைத்து பிரெட்டைப் பாதுகாத்துவைக்கலாம்.

மிளகாய் சிவப்பு, பச்சை, மஞ்சள் என எந்த மிளகாயையும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. ஃபிரிட்ஜின் அதிகக் குளிர் இவற்றை அழுகச் செய்துவிடும். சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் வைப்பதே போதுமானது.

குளிர்ச்சி காய்கள் பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற குளிர்ச்சியை தரக்கூடிய காய் வகைகளையும் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். அவற்றின் இயற்கையான நீர்ச்சத்து மாறி, சுவை மாறிவிடக்கூடும். பூசணி, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் பழங்களையும்கூட ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் இந்த வகை காய்கனிகள் குளிரால் உடைந்து குழைந்துவிடும்.

எண்ணெய் எந்த எண்ணெயும் ஃபிரிட்ஜில் வைக்க கூடியவை அல்ல. குளிரில் எல்லா வகை எண்ணெயும் உறைந்து போய், கடினமாகி கலங்கிவிடும். இதனால் எண்ணெயின் சுவையும் சத்தும் கெட்டுவிடும். சாதாரணச் சூழலே எண்ணெய்க்கு உகந்தது.

சாஸ் வினிகர், மிளகாய் சாஸ் போன்ற உணவுக்கு சுவையூட்டும் பொருள்களைச் சாதாரண சூழலில் அடுப்படியில் பாட்டில்களில் பாதுகாத்து வைப்பதே சிறந்தது. தரமான சாஸ்கள் பல நாள்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியவை. இதனால் இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியம் இல்லை. பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளால் கெடாமல் சாஸ்களைப் பாதுகாக்க, அடிக்கடி பாட்டில்களைச் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சாஸின் சுவையும் காரமும் குறைந்துவிடும் என்பதே உண்மை.

நட்ஸ் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற எந்த உலர்க்கொட்டைகளும் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லாத பொருட்கள். குளிர்ந்த ஈரப்பதம் இந்த வகை நட்ஸ்களின் உள்ளிருக்கும் எண்ணெய்ப் பொருள்களைப் பாதித்து, கெட்டுவிடச் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் வேறு பொருள்களின் வாசத்தால் மாறிவிடும். காற்றுப்புகாத பாத்திரங்களில் மூடி வைத்தாலே இவை கெடாமல் இருக்கும். திராட்சை, அத்தி, பேரீச்சை போன்ற உலர்பழங்களுக்கும் ஃபிரிட்ஜில் இடமில்லைதான். உலர்ந்த பழங்கள் அதன் உலர்ந்த தன்மைக்காகவே விரும்பப்படுகின்றன. அந்தத் தன்மையை ஃபிரிட்ஜின் குளிர் காற்று பாதித்துவிடும்.

ஜாம் : பழங்களால் செய்யப்பட்ட ஜாம்களை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டியது இல்லை. ஜாம்களைப் பாதுகாக்க அதனுள் சேர்க்கப்படும் பொருள்கள் அதிகக் குளிரால் உறைந்து, சுவை மாறிவிடுகின்றன.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பதே உருளைக்கு நல்லது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு

கெட்ச்சப் கெட்ச்சப் தற்போது எல்லா வீட்டிலும் காணப்படுகின்றன. இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்

தக்காளி அதிக குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்

open fridge

Related posts

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் ஏன் குளிக்க வேண்டும்..!

nathan

அழகான ‘சிக்’ இடுப்புக்கும், ஆலிலை போன்ற வழு, வழு வயிற்றுக்கும் ஆசைப்படாத பெண்களே கிடையாது! ஆசைப்பட்டா போதுமா… நடக்கணுமேங்கிறீங்களா? அப்போ, இதப் படிங்க முதல்ல…

nathan

நல்ல நட்பிற்கான எட்டு அம்சங்கள்!!! தெரிந்துகொள்வோமா?

nathan

உடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை விடுவிக்க, ‘Kenaf fibre’ எனப்படும், புளிச்ச கீரை தண்டில் நாப்கின்கள்..

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

மாதுளை பயன்படுத்தும் விதம்

nathan

உங்களுக்கு தெரியுமா மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக ?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்!!!

nathan

ஆண்களே அப்பா ஆகப்போறீங்களா?… அதுக்கு முன்னாடியே இத தெரிஞ்சி வெச்சிக்கோங்க…

nathan