26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
087
ஆரோக்கிய உணவு

சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்ய…!

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 2 பாக்கெட் (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1 கப்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
பட்டர் – 3 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டர் போட்டு காய்ந்ததும், பட்டையைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும். பிறகு அந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் குடைமிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, பால் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவினால், பன்னீர் பட்டர் மசாலா தயார்.087

Related posts

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கும் சிறந்த உணவிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா? நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்

nathan

கலப்பட பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்

nathan

இஞ்சியை தினமும் வெறும் வயிற்றில் ஏன் சாப்பிட சொல்லுறாங்கனு தெரியுமா..?

nathan

வீட்டில் இதெல்லாம் இருக்கா? அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்!

nathan

மரவள்ளிக்கிழங்கு பெண்களுக்கு நல்லது!

nathan

இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும் ஆளி விதை

nathan

சிறுநீரக கோளாறு, உடல் சூட்டை குறைக்கும் சுரைக்காய்

nathan

அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விட…

sangika