சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டிஆக்சிடென்ட்டுகள் சருமத்தில் ஏற்படுகிற கொப்புளங்கள், எக்சீமா எனப்படுகிற சரும நோய் போன்றவற்றை சரியாக்குகின்றன. சருமத்தில் உள்ள தழும்புகளையும் போக்குகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த விழுதில் ஒரு சுத்தமான துணியை முக்கி, முகத்தில் சிறிது நேரம் வைத்திருந்து எடுப்பது சருமத் தழும்புகளை விரட்டியடிக்கிற எளிய சிகிச்சை.
வெந்தயம் சேர்த்துத் தயாரித்த ஃபேஸ்பேக்குகள் பருக்கள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை விரட்டக் கூடியவை.
வெந்தயம் வேக வைத்த தண்ணீரை ஆற வைத்து முகம் கழுவ உபயோகிக்கலாம் அல்லது வெந்தய விழுதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறிக் கழுவலாம். இவை எல்லாமே சரும அழகை மேம்படுத்தும்.
வெந்தயத்தை முறையாக உணவில் சேர்த்துக்கொள்வது கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும். தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை ஊற வைத்து, தினமும் இரவில் அந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து காலையில் குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது கட்டுப்படும். பொடுகையும் விரட்டும்.source-maalaimalar