29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
9 1535197390
ஆரோக்கிய உணவு

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரியாணி சாப்பிடுவதில் உள்ள சாதக, பாதகங்கள்

நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். மொகலாயர்களின் கண்டுபிடிப்பான இந்த பிரியாணி இப்போது நமது அடையாளமாகவே மாறிவிட்டது. ” பிரியாணிக்கு முன் காதலியின் முத்தத்தையும் ” ஏற்கமாட்டேன் என்று கவிபாடும் அளவிற்கு பிரியாணி கோடிக்கணக்கானோரை தன் வசப்படுத்தியுள்ளது.

பிரியாணி சாப்பிடும்போது மட்டும் சிலருக்கு வாயும், வயிறும் பெரிதாகி விடுகிறது. வாரம் முழுவதும் பிரியாணி குடுத்தாலும் சாப்பிடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பிரியாணியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் பிரியாணியின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் பிரியாணியில் கிட்டதட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. ஒரு பிளேட் பிரியாணியில் புரோட்டின்களும், கார்போஹைடிரேட்டுகளும் மற்றும் சில உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளும் இருக்கிறது. புரோட்டின்கள் உபயோகிக்கும் இறைச்சியில் இருந்தும், கார்போஹைட்ரட் அரிசியில் இருந்தும், கொழுப்புகள் எண்ணெய் மற்றும் நெய்யில் இருந்து கிடைக்கிறது. வெஜிடபிள் பிரியாணியாக இருந்தால் வைட்டமின்கள் காய்கறிகளில் இருந்து கிடைக்கும். எந்த பிரியாணியாக இருந்தாலும் அதில் சத்துக்கள் இருப்பது மட்டும் உறுதி.7 1535197364

செரிமானம்

பிரியாணி உங்களின் செரிமானத்தை அதிகரிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள இஞ்சி, ஜீரகம் மற்றும் மஞ்சள் ஆகும். சீரகம் செரிமான நொதிகளின் செயல்பாட்டை விரைவாக்குகிறது, மேலும் கல்லீரலில் இருந்து பித்தத்தை வெளியேற்றுகிறது. மஞ்சள் குடல் வீக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது, இஞ்சி வாயுவை வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி குமட்டல் ஏற்படுவதையும் தடுக்கிறது.

வைட்டமின் பி3
சிக்கன் பிரியாணியாக இருந்தால் அதில் வைட்டமின் பி3 அதிகம் இருக்கும். மேலும் இதில் நியாசின் என்னும் பொருள் உள்ளது. இது உங்களுக்கு போதுமான ஆற்றலை வழங்கக்கூடியது. அதுமட்டுமின்றி கொழுப்புகளை கரைப்பது, நரம்பியல் கோளாறுகளான மனஅழுத்தம், அல்சைமர், நியாபக மறதி போன்ற குறைபாடுகளை சரி செய்கிறது.

செலேனியம்
சிக்கனில் செலேனியம் என்னும் ஊட்டச்சத்து உள்ளது. 100 கிராம் சிக்கனில் ஏறக்குறைய 27.6 மைக்ரோகிராம் செலேனியம் உள்ளது. இந்த செலேனியம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும் அற்புத பணியை செய்கிறது மேலும் திசுக்களின் சிதைவை தடுக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

உறுப்புகளை பாதுகாத்தல் பிரியாணியில் உள்ள மசாலா பொருட்கள் பெரும்பாலும் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கிறது. பிரியாணியில் உள்ள மசாலாப்பொருட்கள் என்னவென்று பார்த்தால் இஞ்சி, மஞ்சள், மிளகு, குங்குமப்பூ, பூண்டு., இவை ஒவ்வொன்றும் தனித்தனி மருத்துவ குணங்கள் கொண்டது. இவை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானது. பூண்டு வாயுக்கோளாறுகளை தடுக்கும், குங்குமப்பூ கல்லீரலை பாதுகாக்கும், இஞ்சி நச்சுத்தன்மையை குறைக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு இதிலுள்ள பொருட்களில் சில புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. பிரியாணியில் அதிகம் உள்ளவை வெங்காயம், மஞ்சள், இஞ்சி, பட்டை, கிராம்பு இன்னும் பல. வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் இயற்கையாகவே புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இவற்றில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் பி6, ஆலிஸின், சல்பியூரிக் மூலக்கூறுகள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவை. இஞ்சி கீமோதெரபியை காட்டிலும் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.

எச்சரிக்கை 1 பிரியாணி எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியத்தை கெடுக்கவும் கூடியது. எல்லாம் நாம் சாப்பிடும் அளவை பொறுத்துதான் இருக்கிறது. தினமும் பிரியாணி சாப்பிடுவது பல ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும். எனவே வாரம் இருமுறை சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எச்சரிக்கை 2 நல்ல கொழுக்களை போல சில தீய கொழுப்புகளும் பிரியாணியில் இருக்கத்தான் செய்கிறது. பிரியாணி சாப்பிட்டவுடன் மூலிகை தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் குடிப்பது நல்லது. இது பிரியாணியில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் செரிமானத்தையும் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி இது உங்கள் கல்லீரலையும் பாதுகாக்கிறது.

எச்சரிக்கை 3 முடிந்தளவு வீட்டிலியே பிரியாணி சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். தரமற்ற பிரியாணி உங்கள் ஆரோக்கியத்தை பதம் பார்த்துவிடும். கூடுதல் சுவைக்காக வெளியே சாப்பிடுவதாக இருந்தாலும் தரமான கடைகளில் மட்டும் சாப்பிடவும்.9 1535197390

Related posts

கேரட் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா….!

nathan

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சர் இருப்பவர்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

வல்லாரையின் மருத்துவப் பயன்கள், கண்டிப்பாக வாசியுங்க….

nathan

பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

nathan

கர்ப்பிணி பெண்கள் வ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் தவிர்த்துவிட வேண்டியது நல்லது.

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிடும்போது புரை ஏறினால் உடனே என்ன செய்ய வேண்டும்?

nathan

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவைகள் மற்றும் சாப்பிடக்கூடாதவைகள்!

nathan

இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்

nathan