25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
36 copy 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும் கொண்டைக்கடலை!

ஆரோக்கியம்

கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி செய்கிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வைத் தடுக்கும். கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றத்தை சரிசெய்யவும் உதவும்.

இரத்த சோகை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம்.

கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும். கொண்டைக்கடலையில் உள்ள மக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்றவை இரத்த நாளங்களை வலிமையடையச் செய்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.36 copy 1

Related posts

ஆரோக்கியத்தை பேண உருளைக்கிழங்கு!

nathan

மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சுவையான சில்லி நூடுல்ஸ் செய்வது எப்படி?

nathan

சுண்டைக்காய் பத்திய சாப்பாடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்ப இத படிங்க!

nathan

அல்சரை குணமாக்கும் பீட்ரூட்

nathan

அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் உகாதி பச்சடி

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்!

nathan

இளமைக்கு உத்தரவாதம் தரும் இயற்கை உணவுகள்!

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஓட்ஸ் தயிர் பாத்

nathan