பொதுவாக பெண்களுக்கு மிகவும் பிடித்த அழகு சாதன பொருட்களில் லிப்ஸ்டிக்கும் (lipstick) ஒன்று. அழகுக்கே அழகு சேர்க்கும் இந்த லிப்ஸ்டிக், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உபயோகிக்கும் ஒரு சாதனம்.
அந்த காலத்தில் எல்லாம் சிவப்பு, ரோஸ் வண்ணங்களில் லிப்ஸ்டிக்குகள் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது வெவ்வேறு வண்ணங்களில் பளப்பளப்பாக மின்னும் லிப்ஸிடிக்களும், சாதாரணாமாக திக்காக இருக்கும் ‘மேட்’ லிப்ஸிடிக்களும் வந்துவிட்டன.
சிறுவயதில் நாம் லிப்ஸ்டிக்கை அணிந்துக்கொண்டு சாப்பிடும் போது பெற்றோர்கள் திட்டுவார்கள். ஏனெனில் அதில் உள்ள ரசாயம் நம் வாயில் போய்விடும் என்று.
இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,
நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்களில் லெட் எனப்படும் ரசாயணம் உள்ளது. இதனால் நமக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் நம் உதடானது அதிக உறிஞ்சும் திறன் கொண்டுள்ளதால் லெட்டானது எளிதில் உறிஞ்சப்பட்டுவிடும்.
அதனால் கடைகளில் லிப்ஸ்டிக் வாங்கும்பொழுது லெட் இல்லாத லிப்ஸ்டிக்கை வாங்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 14 வேளை ஒரு பெண் லிப்ஸ்டிக் அணிந்தால் அதிலிருந்து 87 மில்லி கிராம் ரசாயணம் உதட்டால் உறிஞ்சப்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இது குறித்து ஒப்பனை மருத்துவர் ராஸ்மி செட்டி கூறுகையில், ஒருவர் தினமும் லிப்ஸிடிக்கை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சிகப்பு போன்ற டார்க் (dark colors) லிப்ஸிடிக்களில் அதிக அளவிலான உலோகம் உள்ளது. இதனால் அடிக்கடி லிப்ஸிடிக் அணிவது, உதட்டை நாக்கால் துடைப்பது போன்றவற்றால் பக்க விளைவுகள் ஏற்படும் என்கிறார்.
இதனால் லெட் இல்லாத லிப்ஸிடிக்கை சில முறை மட்டும் பயன்படுத்த வேண்டும். மணிக்கு ஒரு முறை டச்அப் செய்வது கூடாது. குழந்தைகளிடமிருந்து இதுப்போன்ற பொருட்களை விலக்கி வைக்க வேண்டும். மேலும் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் அதற்கான பேஸ்ஸை (base) அணிவது நல்லது என பரிந்துரைக்கிறார் மருத்துவர் ராஸ்மி.