பத்தே நாட்களில் உடல் எடையில் மாற்றம் காண முடியுமா? என்று யோசிக்கிறீர்களா!!! முயற்சித்தால் முடியாதது ஏதும் இல்ல என்ற பழமொழியை கண்டிப்பாக நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே, முயற்சியும், நல்ல பயிற்சியும் இருந்தால். நிச்சயம் பத்தே நாட்களில் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.
உடற்பயிற்சி, உணவு முறை இரண்டையும் சம அளவில் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது அவசியம். பெரும்பாலும் அனைவரும் இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் பின்பற்றுவது தான் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்க செய்கிறது…..
டயட்
உடல் எடையில் மாற்றம் காண நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது டயட் தான். உட்கொள்ளும் உணவின் கலோரிகளை அறிந்து உண்ணுங்கள். உணவு பழக்கத்தை சிறிய அளவில் ஓர் நாளுக்கு 5, 6 முறையாக மாற்றிக்கொள்ளுங்கள். இது கொழுப்பு சேராமல் இருக்க உதவும்.
காய்கறிகள் முடிந்த வரை பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேகவைத்து உண்டாலே போதுமானது எண்ணெய் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து மிக்க பயிர், தானிய உணவுகள் மிகவும் நல்லது.
க்ரஞ்சஸ் (Crunches) பயிற்சி வயிறு, கால், தொடை பகுதிகளில் இருக்கும் கொழுப்பு குறைய க்ரஞ்சஸ் உடல் பயிற்சி செய்வது நல்ல பயன் தரும். கால்களை நீட்டி படுத்தி, கால் முட்டிகளை மடக்கி முடிந்த வரை மார்பை தொடும் அளவு தூக்கி பயிற்சி செய்யுங்கள்.
ப்லான்க்ஸ் (Planks) ப்லான்க்ஸ் என்பது, புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதை போல கால்களை நீட்டி, கை முட்டிகளை தரையில் ஊனி உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்யும் போது உடல் ஒரே நீர் கோடு போல இருக்க வேண்டியது அவசியம்.
ஜாக்கிங், ரன்னிங் உடல் எடை குறைக்க விரும்புவோர் தினமும் செய்ய வேண்டிய பயிற்சி ஜாக்கிங், ரன்னிங். உசைன் போல்ட் மாதிரி யாரும் ஓட வேண்டாம். ஆனால், உங்களால் முடிந்த வரை நன்கு ஓடி பயிற்சி செய்ய வேண்டும்.
குனிந்து, நிமிர்ந்து குனிந்து, நிமிர்ந்து பயிற்சிகள், வேலைகள் செய்ய வேண்டும். உடல் பருமன் இருப்பவர்கள் எழுந்து உட்காரவே மிகவும் சிரமப்படுவார்கள். இதுவே இவர்களை சோம்பேறி ஆக்கிவிடும். இதை நிறுத்தி, முதலில் குனிந்து, நிமிர்ந்து வேலைகள் செய்யுங்கள். வீட்டில் குப்பை பெருக்குவது, துணி துவைப்பது, தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளை ஆண்களாக இருந்தாலும் கூட கூச்சப் படாமல் செய்ய வேண்டும். அப்போது தான் உடல் எடையில் சீக்கிரமாக நல்ல மாற்றம் காண முடியும்.