25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6380
மருத்துவ குறிப்பு

படிக்கத் தவறாதீர்கள்…கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்!

பெரும்பாலான தம்பதிகள் தங்கள் வாரிசாக ஆண் குழந்தைகளை பெற்று எடுக்க ஆசை கொள்கின்றனர். பெண்ணானவள் கர்ப்பம் தரித்தவுடனேயே அவள் மனதில், மற்றும் பெண்ணை சுற்றியுள்ள உறவுகளின் மனங்களில் எழும் முதல் ஆர்வமான கேள்வி. என்ன குழந்தை பிறக்கும் – ஆணா? பெண்ணா? என்பது தான்! ஏன் தம்பதியர்களுக்கு ஆண் குழந்தைகள் மீது இந்த அளவு ஆர்வம் என்று புரியவில்லை.

முந்தைய தலைமுறையினருடன் ஒப்பிடும் பொழுது, இந்த தலைமுறையினர் நன்றாகவே மெச்சுரிட்டி அதாவது மன முதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிப்பின் நோக்கம்! இன்றைய கால தம்பதியர்கள் சற்று மன முதிர்ச்சி அடைந்துள்ளனர்; முன்பு போல் பெற்றால் ஆண் குழந்தை தான், இல்லை குழந்தையே வேண்டாம் – பெண் குழந்தைகளை பெற்றால் செலவு என்றெல்லாம் சிந்திப்பதை அறவே நிறுத்தி விட்டனர் என்று தான் கூற வேண்டும்! இருப்பினும் இந்த பதிப்பு, ஏன் ஆண் குழந்தைகள் வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகளை கூறுகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

இது வெறுமனே மருத்துவ ரீதியாக, ஆண் குழந்தைகள் வளரும் பொழுது, கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் அவர்கள் உடலில் நிகழும் மாற்றங்களை எடுத்துக் கூறுவதற்கே! கண்டிப்பாக ஆண் குழந்தை பிறப்பை மட்டும் ஊக்குவிக்க அல்ல. கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தைகள் வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.!

வயிற்றின் அளவு கர்ப்பிணியின் வயிற்றின் அளவு பெரிதாக இருந்தால் பெண் குழந்தைகள் பிறக்கும் எனவும், அதுவே கர்ப்பிணியின் வயிறு சிறிதாக இருந்தால் ஆண் குழந்தைகள் பிறக்கும் எனவும் கட்டுக்கதை காட்டுத்தீ போல பரவ விடப்பட்டுள்ளது; ஆனால், இதையெல்லாம் நீங்கள் நம்பாதீர்கள்! கர்ப்பிணிகளில் வயிற்றின் அளவு என்பது அவர்கள் உடல் தோலின் அமைப்பு, தசைகளின் அமைப்பு, அவற்றில் ஏற்பட்ட தொய்வின் சதவிகிதம் போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்தே அமையும். ஆகையால் கர்ப்பிணியின் வயிறை வைத்து, உள்ளே வளரும் குழந்தையின் பாலினத்தை எடை போட வேண்டாம்!

முடியின் அளவு கர்ப்பிணிகளுக்கு முடி அடர்த்தியாக, நீளமாக, பளபளப்பாக இருந்தால் அவர்கள் ஆண் குழந்தைகளுக்கு அன்னையாக போகிறார் என்றும், முடி அதிகம் கொட்டி, பொலிவே இல்லாது, அடர்த்தி இன்றி இருந்தால் அவர் பெண் குழந்தைக்கு தாயாக போகிறார் என்றும் நம்பப்படுகிறது. உண்மையில், கர்ப்பிணியின் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் மட்டுமே கர்ப்பிணிக்கு முடி வளர்தலோ, கொட்டுதலோ ஏதோ ஒன்று நிகழ்கிறது.

அழகு திருடப்படுதல் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தின் பொழுது மிகவும் அழகாக, பொலிவான சருமத்துடன் திகழ்ந்தால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்றும், கர்ப்பிணி அழகின்றி, பொலிவு இழந்து சோர்வாக காணப்பட்டால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு மருத்துவ மற்றும் அறிவியல் ரீதியாக எந்தவொரு சரியான சான்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உறங்கும் நிலை கர்ப்பிணிகள் உறங்கும் நிலையை வைத்து பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து விடலாம் என்று பலர் எண்ணுகின்றனர். அதாவது கர்ப்பிணிகள் இடது புறமாக சாய்ந்து தூங்கினால், ஆண் குழந்தை பிறக்கும் என்றும், வலது புறமாக சாய்ந்து தூங்கினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை; ஆனால், கர்ப்பிணிகள் இடது பார்த்து உறங்குவது அவர்களின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

உங்கள் கணவர் நாம் நம்பிக் கொண்டிருக்கும் முக்கியமான முற்றிலும் பொய்யான கட்டுக்கதைகளில் ஒன்று கர்ப்பிணியின் கணவரின் எடை கூடினால், பெண் குழந்தை பிறக்கும்; அதுவே கணவரின் எடை குறைந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது தான்! குழந்தையை கருத்தரிப்பது பெண், ஆனால் குழந்தை பிறப்பினை ஆணின் உடல் நலத்துடன் ஒப்பிட்டு இது தான் நடக்கும் – இந்த குழந்தை தான் பிறக்கும் என்று கூறுவது முட்டாள்தனம்.

பிரசவ வலி கர்ப்பிணிகள் வலி மிகுந்த பிரசவத்திற்கு உள்ளானால், அவர்கள் ஆண் குழந்தைக்கு தாயாவார்கள் என்றும், கர்ப்பிணிகள் வலியே இல்லாத, வலி குன்றிய பிரசவத்திற்கு உள்ளானால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. இது முற்றிலும் உண்மை அல்ல; ஆண் குழந்தைகள் பெரிய தலையுடனும், அதிக உடல் எடையுடனும் – ஆண் குழந்தை மட்டுமல்ல எந்தவொரு குழந்தை இவ்வாறான மாறுபாடுகளுடன் பிறந்தால், அவர்தம் பிரசவம் நிகழ்ந்து முடிய அதிக நேரம் எடுக்கும்; இதனால், அதிக வலியும் ஏற்படும்.

பாதத்தின் குளிர்ச்சி கர்ப்பிணி பெண்ணின் பாதங்கள் மிகவும் குளிர்ந்து காணப்பட்டால், அவர்கள் ஆண் குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்கள் என்றும், இதுவே கர்ப்பிணிகளின் பாதம் சாதாரணமாக இருந்தால், அவர்களின் வயிற்றில் வளர்வது பெண் குழந்தைகள் தான் என்றும் அறியப்படுகிறது. ஆனால், இது மருத்துவ ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ நிரூபிக்கப் படாத, நம் மக்களால் நம்பப்பட்டு வரும் உண்மை!

சிறுநீரின் நிறம்! கர்ப்பிணிகள் அடர்ந்த மஞ்சள் நிறம் கொண்ட சிறுநீரை கழித்தால், அவர்கள் பெண் குழந்தைகளுக்கு தாயாக போகிறார்கள் என்றும், கர்ப்பிணிகளின் சிறுநீர் நிறமின்றி வெண்மையாக வெளிப்பட்டால் அவர்களின் வயிற்றில் ஆண் குழந்தை தான் வளர்கிறது என்றும் நம்பப்பட்டு வருகிறது. உன்மாமியில் வெண்ணிற சிறுநீர் வெளிப்பட கர்ப்பிணி பெண் நன்கு நீர் அருந்துவது மட்டுமே காரணம்! மற்ற கதைகள் எல்லாம், யாரோ முன்பு வாழ்ந்த நபர்களால் கட்டி விடப்பட்ட கட்டுக்கதை!

6380

Related posts

உங்களுக்கு தேமலை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சர் நோயை துரத்தி அடிக்கும் பூண்டு!

nathan

அமிலத்தை குடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்வது?

nathan

உங்களுக்கு தெரியுமா சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சிறுநீரக கற்கள் கரைய செய்யும் ஓர் அற்புத மூலிகை முயன்று பாருங்கள்!

nathan

பல் அழுக்குகள் நீங்கி பளிச்சென இருக்க இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

பருவ பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் இரத்த சோகை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan

‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?

nathan