30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
thulsi manjal 2
மருத்துவ குறிப்பு

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்…
மஞ்சள் தூள் கலந்த துளசி நீரும் மகத்துவம் மிக்கதுதான். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.

சிலர் உடல் உபாதை காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவார்கள்.

அது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதைக் குறிக்கும். அவர்கள், இயற்கை வழிகள் மூலமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

உதாரணமாக, மஞ்சள் தூள் கலந்த துளசி நீரும் மகத்துவம் மிக்கதுதான். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அவை பற்றி அறிந்துகொள்வோம்.

அதற்குமுன், இந்த நீரை எப்படித் தயாரிப்பது என்று தெரிந்துகொள்வோம். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒருமுறை கொதிக்கவிட்டு இறக்கினால் போதும்.

* இயற்கையாகவே துளசி, சளித் தொல்லையைப் போக்கக்கூடியது. அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்துவந்தால், இதன் மருத்துவ குணங்கள் நுரையீரலில் ஏற்படும் அழற்சியைப் போக்கும். சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்.

* துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சினையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

* இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, அவற்றை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

* துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்துவந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்தப் பானத்தை அருந்தினால் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சினையை உடனடியாகத் தடுக்கும்.

* கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சினை குறையும்.

* துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரித்து அழற்சி தன்மை போக்கப்படும். வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சினையைக் குறைக்கும்.

* இந்த இயற்கை பானத்தின் மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றும்.

* மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். அதற்கு இதில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியன்டுகள்தான் காரணம்.

* தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம்.thulsi manjal 2

Related posts

டான்சிலுக்கு ஆபரேஷன் அவசியமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்கள் மட்டும் பார்க்கவும்! வெந்தயத்தை அரைத்து மார்பில் தடவினால் போதும்!

nathan

மாரடைப்பு – இருதய வைத்திய நிபுணர்

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டை மாஸ்க் போடுறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க

nathan

PCOS வந்தால் இந்த பிரச்சனைகளும் வருமா..?

nathan

அலுவலகப் பணியும் குடும்பப் பொறுப்பும் இரண்டையும் எப்படி சமாளிப்பது?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! மாரடைப்புக்கான இயல்பில்லாத சில அறிகுறிகள்!!!

nathan

நன்மைகள் ஏராளமாம்! 1 டம்ளர் துளசி பாலை தினமும் காலையில் குடிச்சு பாருங்க…..

nathan

உங்க கிட்னியில் கற்கள் உருவாக இருக்கணுமா?

nathan