25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1533299470 362
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கீழாநெல்லி…!

சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது.

கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது.பார்வை தெளிவாகிறது. கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும்.

கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.

கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும்.

கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து,கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.

கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.1533299470 362

Related posts

சூப்பர் டிப்ஸ்.. பார்லி தண்ணீர் குடியுங்கள்!

nathan

சில காய்கறிகளை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

ஆண்கள் அப்பாவாக உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…நல்லெண்ணெய் உபயோகித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?

nathan

ரிச் ஓட்டல் சுவையில் வெங்காய பஜ்ஜி செய்யனுமா?

nathan

அசைவ பிரியர்களுக்கு பகீர் செய்தி

nathan

தொண்டை நோய்களை குணமாக்கும் சித்தரத்தை தேநீர்

nathan

குடிக்கும் பாதாம் பாலில் இவ்வளவு ஆபத்து இருக்கா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உணவுக்கு பின் ஐஸ் தண்ணீர் அருந்தகூடாது

nathan