31.7 C
Chennai
Saturday, Jun 1, 2024
saree
அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் ?

புடவை என்பது நமது பாரம்பரிய உடை. பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை.

புது உடைகள் அணிவதற்கு நம் சாஸ்திரத்தில் விதிமுறைகள் இருக்கின்றது.ஒவ்வொரு வண்ணத்திற்கும் உகந்த நாட்களும் உண்டு.

புதன்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் செல்வம் பெருகும் வியாழக்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் அறிவை வளர்க்கும் என்றும் வெள்ளிக்கிழமை புது புடவை உடுத்தினால் பயணம் செய்ய நேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஞாயிறு,புதன், வியாழன்,வெள்ளிகிழமைகளில் வெள்ளை துணிகள் உடுத்தினால் சுபிட்சம் பெருகும். கருப்பு துணி உடுத்த சனிக்கிழமையே சிறந்த தாகும்.சிவப்பு துணி உடுத்த செவ்வாய்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

கல்யாணமாகாத பெண்கள் ஞாயிறு,செவ்வாய்,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு புடவை வளையல் அணிந்தால் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் அவர்களை தேடிவரும்.

எல்லாப் பெண்களுமே புதன்,வியாழன்,வெள்ளிக்கிழைமைகளில் புதுத்துணி உடுத்த சிறந்தது.

திருமணமானவர்கள் புது சிவப்பு புடவை,வளையல்களை சனிக்கிழமை அணியக்கூடாது.

ஞாயிறு,புதன்,வியாழன்,வெள்ளிகிழமைகளில் கேச பராமரிப்பு செய்து தலை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்படுவதுடன் சகல சௌபாக்கியம் மற்றும் சகல செல்வங்களுடன் சந்தோசமாக இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் பல்வேறு ஆன்மிக நூல்கள் மூலம் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.saree

Related posts

அடேங்கப்பா! நான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan

அழகான புருவங்களுக்கு

nathan

வெந்தயததைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்..

nathan

கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

sangika

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்!…

sangika

வேக்சிங் மூலம் வரும் பருக்களை தடுப்பது எப்படி, beauty tips in tamil

nathan

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

nathan

தவறான அழகு குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

sangika