புடவை என்பது நமது பாரம்பரிய உடை. பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை.
புது உடைகள் அணிவதற்கு நம் சாஸ்திரத்தில் விதிமுறைகள் இருக்கின்றது.ஒவ்வொரு வண்ணத்திற்கும் உகந்த நாட்களும் உண்டு.
புதன்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் செல்வம் பெருகும் வியாழக்கிழமை புதிய உடைகள் உடுத்தினால் அறிவை வளர்க்கும் என்றும் வெள்ளிக்கிழமை புது புடவை உடுத்தினால் பயணம் செய்ய நேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ஞாயிறு,புதன், வியாழன்,வெள்ளிகிழமைகளில் வெள்ளை துணிகள் உடுத்தினால் சுபிட்சம் பெருகும். கருப்பு துணி உடுத்த சனிக்கிழமையே சிறந்த தாகும்.சிவப்பு துணி உடுத்த செவ்வாய்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.
கல்யாணமாகாத பெண்கள் ஞாயிறு,செவ்வாய்,வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் சிவப்பு புடவை வளையல் அணிந்தால் நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகள் அவர்களை தேடிவரும்.
எல்லாப் பெண்களுமே புதன்,வியாழன்,வெள்ளிக்கிழைமைகளில் புதுத்துணி உடுத்த சிறந்தது.
திருமணமானவர்கள் புது சிவப்பு புடவை,வளையல்களை சனிக்கிழமை அணியக்கூடாது.
ஞாயிறு,புதன்,வியாழன்,வெள்ளிகிழமைகளில் கேச பராமரிப்பு செய்து தலை அலங்காரம் செய்து கொள்ளும் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப்படுவதுடன் சகல சௌபாக்கியம் மற்றும் சகல செல்வங்களுடன் சந்தோசமாக இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் பல்வேறு ஆன்மிக நூல்கள் மூலம் நமக்கு கூறிவிட்டு சென்றுள்ளார்கள்.