28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
wheat rava chicken biryani. jpg
ஆரோக்கிய உணவு

ரவை சிக்கன் பிரியாணி

ஜீரக சம்பா, பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோதுமை ரவை சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள் :

சிக்கன் – கால் கிலோ
கோதுமைக் குருணை – 2 கப்
நெய் – இரண்டரை டேபிள்ஸ்பூன் + ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
பட்டை – ஒன்று
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
பிரிஞ்சி இலை – ஒன்று
சின்னவெங்காயம் – அரை கைப்பிடி
பெரியவெங்காயம் – ஒன்று
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 4 (கீறியது)
தக்காளி – 2
புதினா இலை – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 4 கப்
முந்திரிப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டரை டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இத்துடன் சின்னவெங்காயம், பெரியவெங்காயம், இரண்டையும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதுகளைச் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.

அடுத்து அதில் பச்சைமிளகாய், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் முக்கால் பாகம் புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கி போதுமான அளவு உப்பைச் சேர்க்கவும்.

சிக்கனில் இருந்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.

இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் மல்லித்தூள் (தனியாத்தூள்) சீரகத்தூள், சோம்புத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி, சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்ததும் கோதுமைக் குருணையைச் சேர்த்து 5 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.

கோதுமையும் கறி, தேங்காய் பால் சேர்ந்து கெட்டியானதும் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் மூடி தம்மில் வைக்கவும்.

கலவை உப்புமா பக்குவத்துக்கு வந்தவுடன், புதினா, கொத்தமல்லித்தழை, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான கோதுமை ரவை சிக்கன் பிரியாணி ரெடி.wheat rava chicken biryani. jpg

Related posts

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika

உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் இந்தப் பழத்தை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாளின் மேலும் பல பயன்கள்

nathan

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

sangika

தெரிஞ்சிக்கங்க…மாதுளம் பழமும், அதன் மருத்துவ பயன்களும்.!

nathan

சுடுதண்ணீரில் தேன் கலந்து குடித்தால் எடை குறையுமா?

nathan

மாம்பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்

nathan

பாதம் பருப்பை விட இந்த பருப்பிற்கு இப்படி ஒரு சக்தியா..?

nathan

பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்

nathan