தேவையான பொருட்கள்
கோதுமை மா- 2 கப்
வெண்ணெய் – கால் கப்
பால் – அரை கப்
தண்ணீர் – கால் கப்
ட்ரை ஆக்டிவ் ஈஸ்ட் – 1 1/4 தேக்கரண்டி
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – தேவைக்கு
சாக்லேட் – ஒன்று
சர்க்கரை பொடித்தது / ஐசிங் சுகர் – தேவைக்கு
செய்முறை
வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும். வெது வெதுப்பான கால் கப் நீரில் ஈஸ்ட் கலந்து வைக்கவும்.
பாலை கொதிக்க வைத்து வெண்ணெயுடன் கலந்து விடவும். இதில் சர்க்கரை கலந்து ஆற விட்டு தயாராக வைக்கவும்.
மாவுடன் உப்பு கலந்து அதில் பொங்கி வந்திருக்கும் ஈஸ்ட் கலவை சேர்த்து, தேவைக்கு பால் கலவை சேர்த்து பிசையவும்.
மாவை கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் பாத்திரத்தை மூடி 5 மணி நேரம் வைக்கவும்.
பின் சற்று கனமாக மாவை திரட்டி டோனட் வடிவம் கொடுக்கவும்.
இதே போல் எல்லாவற்றையும் செய்து மேலே எண்ணெய் தடவி மூடி ஒரு மணி நேரம் வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து மிதமான சூட்டில் அனைத்தையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சர்க்கரை பொடித்து தயாராக வைக்கவும்.
சாக்லேட்டை சிறு துண்டுகளாக்கி மைக்ரோவேவில் வைத்து உருக்கியோ அல்லது பாத்திரத்தில் நீர் வைத்து அதன் மேல் சாக்லேட் உள்ள கப்பை வைத்து அடுப்பில் வைத்தோ சாக்லேட் க்லேஸ் தயார் செய்யவும்.
இப்போது டோனட்ஸை ஒவ்வொன்றாக எடுத்து பொடித்த சர்க்கரை அல்லது ஐசிங் சுகர் அல்லது சாக்லேட்டில் டிப் செய்து எடுக்கவும்
சுவையான டோனட்ஸ் தயார். விரும்பினால் ஸ்ப்ரின்கில்ஸ் பயன்படுத்தவும். இங்கே கொடுத்த அளவில் 8 – 10 டோனட்ஸ் தயாரிக்கலாம்.