26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
umukku
முகப் பராமரிப்பு

மூக்கின் அழகு முக்கியமல்லவா?சூப்பர் டிப்ஸ்…

உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை.

ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும்.

அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.

அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும்.

நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும்.

ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும்.

மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும்.

சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம்.

மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும்.

அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும்.

பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும்.umukku

Related posts

பிளாக் ஹெட்களை போக்க உதவும் அசத்தலான டிப்ஸ்!!!

nathan

உங்களுக்கு இப்படி இருக்கிற தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா?அப்ப இத படிங்க!

nathan

முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை குணப்படுத்த அஞ்சறை பெட்டி!…

sangika

அரிசி மாவை இப்படி பயன்படுத்துவதால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக்

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

Super பேஷியல் டிப்ஸ்…..!

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika

முகத்துல சுருக்கமா? இந்த 3 குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan