31.1 C
Chennai
Monday, May 20, 2024
201605231307171618 dark circles below the eyes used potatoes SECVPF
முகப் பராமரிப்பு

கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.

கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு
கருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளை முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.

ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள். இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும். அதில் ஒரு துண்டை, 3-4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள். இந்த துண்டுகளை பிரிட்ஜ்ஜில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் உங்கள் கண்களின் மேல், 5 நிமிடங்களுக்கு அந்த துண்டுகளை வைத்திருங்கள். சிறந்த பலன் பெற தொடர்ந்து, 10 நாட்களுக்கு செய்யுங்கள்.

வீட்டில் பிரிட்ஜ் இல்லையெனில், உருளைக் கிழங்கு சாற்றையும் உபயோகிக்க முடியும். ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கை துருவி, அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பிழிந்து சாறு எடுக்கவும். ஒரு பஞ்சின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை படுப்பதற்கு முன் வழக்கமாக செய்து வந்தால், கருவளையங்களை வெளிற வைத்து விடும். ஆலிவ் எண்ணெய், தோலை இறுக்கமாக வைக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.201605231307171618 dark circles below the eyes used potatoes SECVPF

Related posts

உங்கள் சருமம் வறண்டிருக்கா? இதோ பொலிவை தரும் ஓட்ஸ் ரெசிபிகள்!!

nathan

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

nathan

முகத்தில் சொரசொரவென்று இருக்கும் கரும்புள்ளிகளை வேகமாக நீக்குவது எப்படி?

nathan

ஆண்களே நீங்க எப்பவுமே இளமையா இருக்கணுமா? இதப் படிங்க…

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

விடுமுறை நாட்களில் முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்க முகம் குண்டா அசிங்கமா இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா?

nathan