29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
d227d71576b33c8cd1d7194c3ecb03a9
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகரித்துவரும் இந்த உடல்பருமன் சாதாரண விஷயம் கிடையாது. இந்த சமூகம் இதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில்

அழகியல் ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் அதிகம் கவனம் பெறக் கூடியதாக உடல் பருமன் இருக்கிறது. இதய நோய், பக்கவாதம், நரம்பு மரத்துப் போதல், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தக் கொதிப்பு அதிகமாதல், பித்தப்பை கற்கள், மன உளைச்சல், மூட்டு தேய்ந்து போகுதல், சர்க்கரை நோய், தோல் உராய்வதால் வரும் Intertrigo, தோல் தடித்துப்போவதால் உண்டாகும் Acanthosis nigricans, பாக்டீரியா தொற்றால் உண்டாகும் Furuncle, Carbuncle கருத்தரிப்பதில் சிரமம், பிரசவத்தில் குழந்தை மிகப் பெரியதாக பிறப்பது (Fetal Macrosomia) போன்ற பல பிரச்னைகளை கூடவே அழைத்து வருவதால் உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
d227d71576b33c8cd1d7194c3ecb03a9
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை

Grade 1 overweight : BMI 25 – 29.9 kg/m2
Grade 2 overweight : BMI 30 – 39.9 kg/m2
Grade 3 overweight : BMI > – 40 kg/m2

இந்த வகைப்படுத்துதல்கூட நாம் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து மாறும்.

Body Mass Index எப்படி கண்டுபிடிப்பது?

BMI = Weight (kg)
(Height in metres)2

முன்பு உடல்பருமனை BMI மதிப்பீட்டைக் கொண்டு கணக்கிடப்பட்டாலும், தற்போது நம் வயிற்றின் சுற்றளவு முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியின் சுற்றளவு 94 செ.மீ.க்கு மேல் இருப்பதும், பெண்களுக்கு 80 செ.மீ க்கு மேல் இருப்பதும் இதய நோய் எளிதாக வருவதற்கு ஏதுவாகும். ஆண்களுக்கு இந்த சுற்றளவு 102 செ.மீ க்கு மேல் தாண்டினாலோ மற்றும் பெண்களுக்கு 88 செ.மீ க்கு மேல் தாண்டினாலோ உடனடியாக வைத்தியம் செய்ய வேண்டும்.

அதுவும் இந்த விகிதம் 25 வயதிலிருந்து 40 வயது உள்ளவர்களுக்கு ஏற்படுவது, வயதானவர்களுக்கு ஏற்படுவதைவிட மோசம். வயிற்றின் சுற்றளவு பெருகப் பெருக, கை, கால்களுக்கு ரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடும். வயிற்றில் புண் ஏற்படும். ரத்தக்குழாய்களில் சேதம் ஏற்படும். வயிற்றுப் பகுதியில் ஹெர்னியா தோன்றும். மூளையில் ரத்தக்கொதிப்பு அதிகமாகும். சிறுநீரகம்கூட பாதிக்கப்படும். மிகவும் கவலை அளிக்கக்கூடிய இன்னொரு விஷயம் என்னவென்றால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.

Intra abdominal pressure அதிகமானால் இருமினாலோ, தும்மினாலோகூட சிறுநீர் வெளியில் வரும். இந்தப் பிரச்னையில் இருப்பவர்கள் சகஜமாக வெளியே செல்வதைக்கூட சங்கடமாக உணர்வார்கள். உடல் பருமனை ஏற்படுத்தும் காரணிகள்மரபணுக்ககள், வயது, பாலினம், வளர்சிதை மாற்றம் ஏற்படுத்தும் காரணிகள், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடு, சமூக பொருளாதார நிலை, உணவு உண்ணும் பழக்கம், எந்த அளவுக்கு நாம் ஓடியாடி வேலை செய்கிறோம். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல விஷயங்களின் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவும், நம் உடல் உழைப்பின் அளவும் மிக முக்கியமான காரணிகள். உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் எடை குறைப்பு திட்டங்களினால் 3, 6 மாதங்களில் தங்களின் 10% எடையை குறைத்தால்கூட 1 வருடத்தில் குறைத்த எடையில் முக்கால்வாசியை திரும்பவும் பெற்று விடுகிறார்கள். முதலில், ஒருவர் தான் உடல் பருமனோடு இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். இந்த அவசர யுகத்தில் எல்லோரும் மிக தாமதமாகப் படுத்து, காலையில் அவசர அவசரமாக எழுந்து, எளிதாக கிடைக்கும் உணவினை மென்றும் மென்னாமலும் சாப்பிட்டு,

பரபரவென்று வேலை பார்த்து, பதற்றமாக டிராஃபிக்கில் வந்து (டிராஃபிக் சிக்னலையும் மதிக்காமல், தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதுபோல் வண்டி ஓட்டி), தான் என்ன உண்கிறோம் என்ற கவனமேயில்லாமல், (தடுக்கி விழுந்தால் தெரியும் ஸ்வீட் கடை, பேக்கரி, லஸ்ஸி கடை, ஐஸ்க்ரீம் கடை, குளிர்பானங்கள், கோழியை முழுது முழுதாக கம்பியில் சுட்டு எடுக்கும் ஹோட்டல், பார்), இரவு சாப்பாடு முடிந்து ஃபேஸ் புக், வாட்ஸ் அப் பார்த்து திரும்பவும் லேட்டாக படுத்து… இந்த சுழற்சி முடிவேயில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது.

இப்படி வாழ்வதால் உடலும், மனமும் சோர்ந்துதான் போகும். உடல் பெருத்துத்தான் போகும். முதலில் ஒரு எளிய பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நமக்குத் தெரிந்து நாம் எவ்வளவு ஸ்வீட், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிடுகிறோம் என்று முதலில் குறித்து வைக்கலாம். இதைத்தவிர, நாம் சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குறித்து வைக்கலாம். இதை ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் எவ்வளவு தேவையில்லாத Empty Calories நம் உடலுக்குள் சென்றது என்று நமக்குத் தெரியும்.

இதையெல்லாம் வெறும் நாவின் சுவைக்காக மட்டுமே நாம் சாப்பிட்டிருக்கிறோம் என்று உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இதை தவிர்ப்பது முதல் படி. இரண்டாவது முக்கிய விஷயம், நம்முடைய செயல்பாடுகளை அதிகரிப்பது. ஏதாவது ஒரு உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். எடுத்தவுடன் உங்களை மாரத்தான் ஓடச் சொல்லவில்லை. முதலில் ஒரு 10 நிமிடமாவது தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். எந்தவித செலவும் இல்லாத மிக எளிமையான உடற்பயிற்சி இது. கை, காலை வீசி நடக்கலாம்.

தினமும் இதைச் செய்யச் செய்ய நம் மனதும் கொஞ்சம் உத்வேகம் கொள்ளும். கொஞ்ச நாள் சென்றபின் நாம் நடக்கும் நேரத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொள்ளலாம். வீட்டிலே நடந்துகொண்டுதான் இருப்பேன் என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். நாம் வீட்டுக்குள் வேறு வேலை நிமித்தமாக நடப்பதற்கும், உடற்பயிற்சிக்காக பிரத்யேகமாக கை, கால் வீசி நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

தொப்பை குறைப்பதற்கு அல்லது கை மற்றும் தொடை சதையை குறைப்பதற்கு அதற்கான உரிய உடற்பயிற்சி செய்யும்போதுதான் அந்த இடத்தில் உள்ள சதை குறையும். ஆனால், அதுவும் தொடர்ந்து செய்தால்தான் நடக்கும். இப்படி உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தும், உடற்பயிற்சி செய்தும், 45 நிமிடங்கள் நடந்தும் சில இடங்களில் உங்களுக்கு சதை அப்படியே இருந்தால், அதை குறைப்பதற்கு இப்போது நவீன கருவிகள் உள்ளன. அவை Lipo Laser, Cryolipolysis மற்றும் Cavitation Therapy.

Lipo Laser

இந்த சிகிச்சையில் ஒரு பெல்ட் மூலம் குறைவான லேசர் லைட்டை உபயோகித்து கொழுப்பை அந்த செல்லை உடைக்காமலேயே வெளியேற்றும். ஆகையால் இந்த சிகிச்சை முடிந்தவுடன் 30-40 நிமிஷம் உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி செய்யும்போது வெளியே வந்த கொழுப்பு நிணநீர் ஓட்டத்தால் உடம்பிலிருந்து வெளியேறும்.

Cryolipolysis

இந்த சிகிச்சையில் உடம்பில் உள்ள தேவையில்லாத சதை ஒரு கருவியில் உள்ளிழுக்கப்படும். அந்தச் சதை மட்டும் ‘5 முதல் 11 டிகிரி செல்சியஸ்’ குளிர்வான தட்பவெப்ப நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு கொழுப்பு செல்கள் உறைய வைக்கப்பட்டு உடலில் இருந்து நீங்கும்.

Cavitation Therapy

இந்த சிகிச்சையில் Ultra sound அல்லது Radio frequency எனர்ஜி உபயோகிக்கப்பட்டு கொழுப்பு செல்களை உடைத்து வயிறு, கை மற்றும் தொடை போன்ற இடங்களின் சுற்றளவு குறைக்கப்படும். இந்த சிகிச்சைகளை Non-Invasive Fat reduction methods என்று அழைப்பார்கள்.

இந்த சிகிச்சைமுறைகளை எடுத்தவுடன் எழுதாமல் ஏன் கடைசியில் எழுதியுள்ளேன் என்றால் உடற்பயிற்சியும் உணவு கட்டுப்பாடுமில்லாத எந்த எடை குறைப்பு வைத்தியமும் வேலை செய்யாது. அவைகள் வேலை செய்வதுபோல தெரிந்தாலும் நீங்கள் காலையில் இழந்த 1 இன்ச் பருமன் இழப்பு மாலையே வந்து விடக்கூடும்.

எனவே, நாம் அனைவருமே நல்ல பழக்க வழக்கங்களை நம் சமூகத்தில் கடைபிடிப்பதால் வளமான இளைஞர்களையும், குழந்தைகளையும் உருவாக்கலாம். மேற்கூறிய சிகிச்சைகள் தவிர அறுவை சிகிச்சை முறைகள், லைப்போ சக்‌ஷன், பசியை கட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் போன்றவைகளும் எடை குறைப்புக்கு உதவும்.

ஆனால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏதோ ஒரு மேஜிக் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்தாலோ அல்லது ஒரே ஒரு மாத்திரையில் உங்களின் உடல் பருமனை சரி செய்வோம் என்று யாராவது கூறினால் தயவு செய்து அதைச் செய்யும் முன் கொஞ்சம் சிந்தியுங்கள்.

Related posts

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்ற உதவும் பொருட்கள்!!!

nathan

அப்படி என்ன ஸ்பெஷல்? நாட்டுக் கோழி சாப்பிடுவது ஏன் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?

nathan

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

nathan

கால் மேல் கால்போட்டு உட்காருபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்! தெரிந்துகொள்வோமா?

nathan

தொப்பையை குறைக்க நினைக்கும் பெண்களுக்கு…

nathan

ஹேர் மாஸ்க் உங்க அனைத்து முடி பிரச்சனைகளை சரிசெய்யுமாம்!இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!

nathan