28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
6 juice 1525328877
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள்!

மக்கள் தங்களது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உண்ணும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். உங்களது உடல் எடையை வெறும் உணவுகள் மட்டும் அதிகரிப்பது இல்லை. ஆனால் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் குடிக்கும் பானங்களையும் கவனிக்க வேண்டும். நம்மில் பலரும் பழச்சாறுகள் மற்றும் எனர்ஜி பானங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் சர்க்கரை மற்றும் இதர கெமிக்கல் கலந்த சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பதால், அது ஒருவரது உடல் எடையைக் குறைக்கும் திட்டத்தையே பாழாக்கும் என்பது தெரியுமா?

ஆகவே நீங்கள் உங்கள் தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், கலோரி குறைவான மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு உடல் பருமனுக்கு காரணமான தேவையற்ற கொழுப்பு தேக்கத்தைக் குறைப்பதற்கு உதவும் பானங்கள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? முக்கியமாக உடல் ஆரோக்கியம் பாழாகாமல், ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டியது என்பது முக்கியம். இக்கட்டுரையில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்கும் அற்புத பானங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அந்த பானங்களைக் குடித்து நன்மைப் பெறுங்கள்.

திராட்சை ஜூஸ் திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். அதோடு இது உடலை சுத்தமும் செய்யும். இந்த திராட்சை புளிப்பும், இனிப்பும் கலந்து இருப்பதால், இதை ஜூஸ் வடிவில் எடுத்தால் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் கருப்பு நிற திராட்சையால் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் காலையில், சாப்பிடும் போது ஒரு டம்ளர் குடித்து வந்தால், அது உடல் எடையை குறைக்க உதவும்.

தண்ணீர் தண்ணீரை விட சிறப்பான பானம் வேறு எதுவும் இல்லை. ஒரு நாளைக்கு ஒருவர் 8-12 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டியது அவசியம். இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது சிறுநீரின் வழியே வெளியேறிவிடும். மேலும் நாள் முழுவதும் உடலை வறட்சியின்றி நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதுவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதால், அது உடலில் உள்ள கலோரிகளை அதிகம் எரிக்குமாம். சுடுநீரைக் குடித்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றும்.

க்ரீன் டீ க்ரீன் டீயின் மகிமைகள் குறித்து அனைவருக்குமே தெரியும். சொல்லப்போனால், க்ரீன் டீ பிரபலமானதே, அது உடல் எடையைக் குறைக்கும் என்பதால் தான். இதற்கு க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம். இத்தகைய க்ரீன் டீயை ஒருவர் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். அதுவும் க்ரீன் டீயை காலை மற்றும் மாலையில் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை வேகமாக குறையும்.

தயிர் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது மற்றும் இது உடல் எடையைக் குறைக்கும். தயிரில் உள்ள பண்புகள் கொழுப்புக்கள் எளிதில் கரைக்கும் என்பதால், இந்த தயிரை ஒருவர் தினமும் 1/2 கப் உட்கொண்டு வந்தால், அது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைக்க உதவும். அதுவும் தயிரை ஒரு நாளைக்கு 1-2 முறை உட்கொண்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

இளநீர் இளநீர் உடலின் சூட்டைக் குறைப்பதோடு, உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் இதில் எலக்ட்ரோலைட்டுக்களும் அதிகம் உள்ளது. வயிற்று பிரச்சனைகள் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இளநீரைக் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஒருவர் தினமும் 1-2 டம்ளர் இளநீரைக் குடித்து வந்தால், ஒரு நாளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் செய்யும்.

காய்கறி ஜூஸ் காய்கறி ஜஸ்கள் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், அதுவும் நார்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிட்டால், அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். ஆனால் காய்கறிகளை ஜூஸாக குடித்தால், அது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்போர் நற்பதமான நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளால் ஜூஸ்களைத் தயாரித்து தினமும் குடித்து வந்தால், உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, வயிறு முட்ட சாப்பிடும் எண்ணம் இல்லாமல் போகும்.

கிரான்பெர்ரி ஜூஸ் நற்பதமான கிரான்பெர்ரி ஜூஸ் உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான பானங்களுள் ஒன்றாகும். கிரான்பெர்ரி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது உடலில் செல் பாதிப்பை உண்டாக்கும் ப்ரீ ராடிக்கல்களை நீக்க உதவும். மேலும் இந்த ஜூஸில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இதனால் இது உடலில் நீர்த்தேக்கத்தைத் தடுக்கும். கிரான்பெர்ரி ஜூஸில் உள்ள ஆர்கானிக் அமிலங்கள், கொழுப்புக்களைக் கரையச் செய்து, உடலில் இருந்து வெளியேற்றும். மேலும் இது உடலில் இருந்து டாக்ஸின்களை நீக்கவும் உதவும்.

வே புரோட்டீன் ஆய்வு ஒன்றில் வே புரோட்டீன் உட்கொண்ட பெண்களின் உடலில் கொழுப்புக்கள் குறைந்து, உடல் எடை குறைந்திருப்பது தெரிய வந்தது. வே புரோட்டீனில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். வே புரோட்டீனை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், அது பசியுணர்வைக் குறைக்கும். அதுவும் இது குடித்த 2 மணிநேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும்.

ப்ளாக் காபி எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர் ப்ளாக் காபியை குடிப்பது நல்லது. ஏனெனில் இது உடலின் வெப்பநிலையை எளிதில் அதிகரித்து, மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது பசியைக் குறைக்க உதவுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். எனவே தினமும் 2 கப் ப்ளாக் காபியை சர்க்கரை சேர்க்காமல் சில வாரங்கள் குடித்து வாருங்கள். இதனால் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.6 juice 1525328877

Related posts

லஸ்ஸி… வெயிலுக்கு இதம், உடலுக்கு நலம் தரும் அமிர்தம்!

nathan

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan

காலை உணவாக கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவோர் கவனத்துக்கு…!

nathan

சுவையான இரும்புச்சத்து நிறைந்த ராஜ்மா சுண்டல்

nathan

தெரிஞ்சிக்கங்க… வெறும் வயிற்றில் அம்லா சாறு குடிப்பதன் நன்மைகள்..!!

nathan

இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் முள்ளங்கி

nathan

சூப்பரான மீன் வறுவல்…வேகமாக செய்வது எப்படி?

nathan

அன்றாட வாழ்வில் பழங்கள் ஆரோக்கியம் நம்மிடம்

nathan

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan