26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
cach chua tieu chay bang nu oi
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ் …ஆண்மையை அதிகரிக்க இந்த இலையில் டீ போட்டு குடிங்க போதும்!

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். அது அற்புதமான பண்புகளையும் பயன்களையும் கொண்டது.

பழவகைகளில் முக்கியமான ஒரு பழமாக இருப்பது கொய்யாபழம் ஆகும்.அனைவரும் விரும்பி உன்னகூடிய பழம் ஆகும்.குறிபிட்ட காலங்களில் அதிகமாக கிடைக்ககூடியது. அதன் இலைகளில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.

 

கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது,எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து.

நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படும்.கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

 

செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும். எனவே இந்த கொய்யா இலையைக் கொண்டு எப்படி டீ தயாரிப்பது அதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது பற்றிப் பார்ப்போம்.

எவ்வாறு தயாரிப்பது

சுத்தமான கொய்யா 5
சுத்தமான தேன் – தேவையான அளவு,
ஏலக்காய் – 2

 

சுத்தமான கொய்யா இலையை எடுத்துக்கொண்டு வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ, நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். கொய்யா இலை வாசனை பிடிக்காதவர்கள் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு பருகலாம்.

கொய்யா நார்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், தாமிரம், மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவை போல் கொய்யா நான்கு மடங்கு வைட்டமின் சி கொண்டது.

 

கொய்யா இலைகள் வெப்ப மண்டல நாடுகளில் பாரம்பரிய மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. க்யூயர்சிடின், வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளை கொண்டுள்ளது. கொய்யா இலையின் மகத்துவக் குறிப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு
புரதம் – 2.55 கிராம்
வைட்டமின் B6 – 0.11 மி.கி (8%)
கோலைன் – 7.6 மி.கி (2%)
வைட்டமின் சி – 228.3 மி.கி (275%)
கால்சியம் – 18 மி.கி (2%)
இரும்பு – 0.26 மி.கி (2%)
மெக்னீசியம் – 22 மி.கி (6%)
மாங்கனீசு – 0.15 மி.கி (7%)
பாஸ்பரஸ் – 40 மி.கி (6%)
பொட்டாசியம் – 417 மி.கி (9%)
சோடியம் – 2 மி.கி (0%)
துத்தநாகம் – 0.23 மி.கி (2%)
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்குகிறது.

 

இலையின் நன்மைகள்
புற்றுநோய்
கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் கட்டி வளர்ச்சிகளை தடுக்கிறது. இது பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு, வாய் குழி மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும்.

கொய்யா உணவில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சு தன்மையிலிருந்து பாதுகாக்கிறது. கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

 

நீரிழிவு
ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனம் நடத்திய கொய்யா இலை பற்றிய ஆய்வில் கொய்யா இலை தேனீர் ஆல்பா-glucosidease நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

கொய்யா இலை தேனீர் குடித்த 12 வாரங்களில் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் குறைக்கிறது. வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும். கொய்யா இலையை இளம தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

 

செரிமானம்
கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது. எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அதை வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தீராத வயிற்று வலி குணமாகும். இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நிறுவனம் 2010 ல் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு கொய்யா இலையில் தயாரிக்கப்பட்ட தேநீரை பருக கொடுத்தனர். இந்த ஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு குறைந்த மொத்த கொழுப்பு, குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புப்புரத நிலைகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருந்தது தெரியவந்தது.

 

முடியை உறுதிபடுத்த
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும். கொய்யா இலை தேனீரால் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க முடியும். இதனால் நீரிழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைவார்கள்.

கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி முகப்பரு உருவாவதை தடுக்கிறது. கொய்யா, தோல் அமைப்புமுறை மேம்படுத்துகிறது. தளர்வான தோல் சரிசெய்வதில் சந்தையில் கிடைக்கும் ஊட்டமளிக்கும் லோஷன்களை விட இது சிறந்தது. கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது.cach chua tieu chay bang nu oi

Related posts

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

nathan

எப்படியெல்லாம் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்

nathan

உங்களுக்கு தெரியுமா கண் பார்வையை தெளிவாக்க தினமும் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

nathan

உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை

nathan

ஆய்வில் அதிர்ச்சி! சிசு வளர்ச்சியை பாதிக்கும் பாரசிட்டமால் …

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகமான பிரசவம் அமைய ஆயுர்வேத நூல்கள் கூறும் டிப்ஸ்கள்!

nathan