26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
201806161015517992 1 briyani1. L styvpf
அறுசுவைஅசைவ வகைகள்

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

மட்டன்  – 1 கிலோ
அரிசி  – 1 கிலோ
எண்ணெய்  – 100 கிராம்
நெய் – 150 கிராம்
பட்டை  – 2 துண்டு
கிராம்பு  –  ஐந்து
ஏலக்காய் – முன்று
வெங்காயம்  – 1/2 கிலோ
தக்காளி  – 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது
கொ. மல்லி  – 1 கட்டு
புதினா  – 1 கட்டு
மிளகாய்  – 8
தயிர்  – 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள்  – 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிறிதளவு
எலுமிச்சை பழம்  – 1

செய்முறை:
201806161015517992 1 briyani1. L styvpf
* முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

* பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

* பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்

* பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

* மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

* பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.

*  அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

* வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.
* கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.
* ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

* அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

Related posts

பீர்க்கங்காய் முட்டை பொரியல்

nathan

மட்டன் பிரியாணி

nathan

பூரி செய்வது எப்படி

nathan

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் பிரை

nathan

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

nathan

சில்லி சிக்கன்

nathan

பட்டாணி பொரியல்

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan