25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1528702312
மருத்துவ குறிப்பு

இந்த மூலிகையை எங்க பார்த்தாலும் விட்றாதீங்க… ஏன் தெரியுமா?…

இயற்கையின் படைப்புகளில், மூலிகைகளுக்கு தனி இடம் உண்டு, அதில் ஒரே குடும்பத்தில் உள்ள சில மூலிகைகள், பெயரில் வேறுபட்டாலும், அவற்றின் செயல் தன்மைகளில் ஒன்றுபட்டே காணப்படுகின்றன.

தொட்டாசிணுங்கி எனும் தேவ மூலிகையில், இருவேறு வகைகள் உள்ளன என்பதும், அதில் மஞ்சள் வண்ணப் பூக்கள் மலரும் ஒரு வகை, வயலெட் வண்ணப்பூக்கள் மலரும் மற்ற வகையும் உள்ளதை, நாம் காண முடியும்.

மூலிகைகள் இறைவனுக்குப் படைக்கும் மருத்துவ மூலிகையான துளசியில், காட்டுத்துளசி, சீனித்துளசி போன்ற பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. ஈசனை வணங்க, ஒரு வில்வம் போதுமென்பார்கள். அத்தகைய பேறுபெற்ற, மருத்துவ குணமிக்க வில்வத்தில், சர்க்கரை வில்வம் எனும் வகையும் உண்டு என்பதும், அது, சர்க்கரை பாதிப்பைத் தீர்க்கும் அருமருந்து, என்பதும், நம்மில் பலரும் அறியாத ஒன்றாகவே, இருக்கும். அந்த வரிசையில், மஞ்சள் காமாலை வியாதியைப் போக்கும் அற்புத மூலிகையான, கல்லீரலைக் காக்கும் மூலிகை டானிக்காக மருந்தகங்கள், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கீழாநெல்லியின் மகத்துவத்தை நாம் அறிந்திருப்போம். கீழாநெல்லியின் குடும்பத்தில் உள்ள மற்றவகைச் செடிதான், மேலாநெல்லி. இதுவும், அரிய மருத்துவ குணங்கள் நிறைந்து, மனிதர்களின் வியாதிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது.

மேலாநெல்லி மூலிகை. கீழாநெல்லி மூலிகையை எல்லோரும் சுலபத்தில் அடையாளம் காணமுடியும். சிறிய கூட்டிலைகளின் பின்புறம் நடுக்காம்பில், சிறு உருண்டைகளாக, காய்கள் அமைந்திருக்கும். மேலாநெல்லி மூலிகையில், கீழாநெல்லியைப் போன்ற இலைகளின் பின்புறம், நடுத்தண்டுகளில், நீண்ட காம்புகளுடன் காய்கள் காணப்படும். இலைக்காம்பில் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் தண்டில் ஒட்டி வளராமல், காம்புகள் மூலம், தணித்து வளர்ந்து காணப்படும். இதனாலேயே, மேலாநெல்லி என, இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. நிலநெல்லி என்றும் மேலாநெல்லியை அழைக்கிறார்கள்.

தமிழகத்தின் செம்மண் மற்றும் சரிசல் மண் நிலங்களில், தானே வளரும் களைச்செடியாகும், மேலாநெல்லி. வயல்களில் காணப்படும் கொழுஞ்சி, மூக்கிரட்டை போன்ற மருத்துவ குணமிக்க களைச்செடிகளைப் போல, மேலாநெல்லியும், மருத்துவ குணங்கள் மிகுந்த களைச்செடியாகும். பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நச்சு பாக்டீரீயா எதிர்ப்புத் தன்மை மிக்கது. மேலாநெல்லி, பொதுவாக, கரும்பு, சோளம், பருத்தி போன்றவை பயிரிடும் நிலங்களில் அதிகம் காணப்படும் களைச்செடியாகும். இதன் மூலிகைத்தன்மை காரணமாக, விவசாயிகள் இவற்றை அழிக்காமல், நன்கு வளர்ந்ததும், வேர்களை விட்டு, தண்டு மற்றும் இலைகளை வெட்டி காயவைத்து, பதப்படுத்தி, மூலிகைத் தயாரிப்பாளர்களிடம், மொத்தமாக விற்றுவிடுகின்றனர்.

மேலாநெல்லியின் மருத்துவ குணங்கள் மேலாநெல்லியில் காணப்படும் பில்லாந்தின் எனும் வேதிச்சத்து, சிறுநீர்த்தாரை கடுப்பு, கல்லீரல் வியாதிகள், தலைவலி, காது வலி போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு மருந்தாகின்றன. மேலாநெல்லி மூலிகை, கால்நடைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

சிறுநீர் கடுப்பு சிறுநீர்க் கடுப்பு தீர, நிவாரணம் அளிக்கும் மேலாநெல்லி. கோடை காலத்தில், ஆண்களையும் பெண்களையும் அதிகம் பாதிக்கும் ஒரு கோளாறு, சிறுநீர்க்கடுப்பு. எதனால் ஏற்படுகிறது இந்த சிறுநீர்க்கடுப்பு?

கோடைக்காலத்தில் இறுக்கமான ஆடைகள் அணிவது, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, சிறுநீர்க் கழிக்கும் செயலை ஒத்திப் போடுவது, வெயிலில் அதிக வியர்வை வெளியேறுவது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, போன்ற காரணங்களால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, சிறுநீர் வெளியேறும் அளவும் குறைந்துவிடுகிறது.

இதன் காரணமாக காரத்தன்மைமிக்க உடல் கழிவு நீரான சிறுநீர், அமிலத் தன்மை மிக்கதாக மாறிவிடும். இந்த நீர், வெளியேறும்போது, சிறுநீர்த் தாரையில் கடும் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வுடனே, இந்த வலி ஏற்படும் சமயங்களில் எல்லோரும் இருப்பார்கள், ஆயினும், சிறுநீர் வராது, இருந்தாலும், எல்லோரையும் கழிவறையிலேயே, கடும் வலியுடன் அமர்ந்திருக்க வைத்து விடும். இந்த பாதிப்பு நீங்க, தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இதுபோன்ற சமயங்களில், சிறுநீரில் கலந்து வெளியேற வேண்டிய உப்புக்கள் சிறுநீர்த் தாரையில் படிந்து, கற்களாக மாறிவிடுகின்றன. இவையே பின்னர், சிறுநீரகக் கற்கள் எனும் தொல்லை கொடுக்கும் பாதிப்பாக, ஆகிவிடுகின்றன.

சிறுநீர்க் கடுப்புக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் மூலிகையாகத் திகழ்கிறது, மேலாநெல்லி. சமூலம் எனும் முழுச்செடியையும் உள்ளங்கையளவு எடுத்து, அம்மியில் அரைத்து, மூன்று டம்ளர் நீரில் இட்டு காய்ச்சி, ஒரு தம்ளராக, நீர் வற்றிவரும்போது, அந்த நீரை வடித்துப் பருகி வர, சிறுநீர் பெருமளவு வெளியேறி, சிறுநீர்க்கடுப்பு பாதிப்பு நீங்கிவிடும். இந்த நீரை, தினமும் இரு வேளை என்ற அளவில், மூன்று நாட்கள் தொடர்ந்து பருகிவர, சிறுநீர்த் தாரையில் படிந்த உப்புக்கள் கரைந்து, சிறுநீரகக் கற்களின் பாதிப்புகள் நீங்கிவிடும். சிறுநீரைப் பெருக்கி, சிறுநீர்த் தாரை தொற்றுக்களை சரிசெய்யும் ஆற்றல் மிக்கது, மேலாநெல்லி.

தலைவலி, தலைபாரம் மேலாநெல்லி தண்டு மற்றும் இலைகளை நன்கு காயவைத்து அரைத்து, சாறெடுத்து, தினமும் காலையில் பருகி வந்தால், தலைவலி, தலையில் நீர் கோர்த்து ஏற்பட்ட தலைபாரம் தீர்ந்துவிடும். ஆஸ்துமா பாதிப்புகளும் அகலும்.

மலச்சிக்கல் மேலாநெல்லி வேர்களை நன்கு காயவைத்து, கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் இட்டு காய்ச்சி, அரை டம்ளர் ஆனவுடன் அந்த நீரை வடிகட்டிப் பருகிவர, உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தி வந்த மலச்சிக்கல் நீங்கி விடும். மேலும், வயிற்றுப் போக்கையும் குணப்படுத்தும் தன்மைமிக்கது. மேலாநெல்லி விதைகளும் மலச்சிக்கலை நீக்கும் ஆற்றல் மிக்கவை.

பசியின்மை மேலாநெல்லி செடியை காயவைத்து பொடியாக்கி, அதை நீரில் கலந்து காய்ச்சி பருகிவர, உணவில் ஏற்பட்ட வெறுப்பு மறைந்து, நன்கு பசியெடுக்கும். சாப்பிடாததால், வயிற்றில் குடல் சுருங்குவதால் ஏற்படும் வலிகளையும் போக்கும்.

பெண்களின் மாதவிலக்கு பாதிப்புகளைக் களையும் மேலாநெல்லி. சில பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி, ஒழுங்கற்ற வகையில் ஏற்படும், அடிக்கடி ஏற்படும் இந்த நிகழ்வால், பெண்கள் உடல் சோர்ந்து, பலகீனமாகக் காணப்படுவார்கள். மேலாநெல்லி பொடியைக் காய்ச்சி பருகி வருவதன் மூலமும், பாலில் கலந்து பருகி வருவதன் மூலமும், உடல் நச்சுக்கள், கிருமி பாதிப்புகள் விலகி, பெண்களின் மாதவிலக்கு பாதிப்புகள் நீங்கி, சீரான மாதவிலக்கு சுழற்சி ஏற்படும்.

ஆண்களின் விதைப்பை வீக்கம், இதய பாதிப்புகள் போன்றவற்றுக்கு, மேலாநெல்லி வேர் கசாயம், சிறந்த நிவாரணமளிக்கும் மருந்தாகத் திகழ்கிறது.

வாதநோய் ருமாட்டிசம் எனும் வாத நோய் போக்கும் மேலாநெல்லி. மேலாநெல்லி இலைகளை நசுக்கி, எலுமிச்சை சாற்றில் தோய்த்து, உடலில் வாத பாதிப்புள்ள இடங்களில் நன்கு தேய்த்து வர, நோயின் பாதிப்புகள் மெல்ல நீங்கும். மேலாநெல்லி செடியைப் பதப்படுத்தி, பொடியாக்கி, அதை பாலில் கலந்து பருகிவர, மஞ்சள் காமாலை குணமாகும் என்கிறார்கள்.

கென்யா போன்ற ஆப்பிரிக்க தேசங்களில், இந்தச்செடியை எரிப்பதனால் ஏற்படும் புகையில், சோளப் பயிர்களில் இருக்கும் பூச்சிகளை விரட்டுகிறார்கள்.

பசுமையான இலைகளைக் கொண்ட மேலாநெல்லியை, கால்நடைகள் விரும்பி உண்கின்றன. அவற்றுக்கு மருந்தாகவும், மேலாநெல்லி மூலிகை பயன்படுகிறது.

உடல் வலிப்பு, மனத்தளர்ச்சி பாதிப்புகளையும் களையும் தன்மை இருப்பதாகக் கருதப்படும் மேலாநெல்லியின் பயன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.1 1528702312

Related posts

தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!’

nathan

எனக்கு மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், சில நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது?

nathan

நீரிழிவு பிரச்சனைக்கு வெந்தயத்தை சுடுநீரில் ஊறவைத்து.. இப்படி செய்து பாருங்கள்!

nathan

உங்கள் துணை காதலில் எப்படிப்பட்டவர் என்பதை தெரிஞ்சுக்க இத மட்டும் கவனிச்சா போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…எலுமிச்சையை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா!!!

nathan

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ரத்த குழாய் அடைப்பு நீங்க.! இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

nathan

மூட்டுவலிக்கு முக்கிய பயன்தரும் நொச்சி இலை

nathan

ஆண்களின் ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்

nathan