28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
12 1513071145 10 himalayansalt
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கல் உப்பைக் கொண்டு நுரையீரலில் உள்ள சளியை வெளியேற்றுவது எப்படி?

இமாலய கல் உப்பு குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் உப்பை விட பல மடங்கு நன்மைகளைக் கொண்டது தான் இமாலய கல் உப்பு. இந்த கல் உப்பில் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் 84-க்கும் அதிகமான கனிமச்சத்துக்கள் மற்றும் இயற்கை கூறுகள் உள்ளன.

இதில் உள்ள கனிமச்சத்துக்கள் மிகவும் நுண்ணிய அளவில் இருப்பதால், நம் உடற்செல்களால் வேகமாகவும் எளிதிலும் உறிஞ்சப்படும். இந்த உப்பு கொண்டு உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். மேலும் 200 ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கு ஐரோப்பாவில் உப்பு அறைகள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது.

முக்கியமாக இந்த உப்பு அறைகளானது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. பல வருடங்களுக்கு முன்பு, நுரையீரல் பிரச்சனைகளை சரிசெய்ய உப்பு சுரங்கங்கள் விஜயம் செய்யப்பட்டன. பண்டைய கிரேக்கர்கள் கூட சுவாசக்குழாய் பிரச்சனைகளுக்கு ஹாலோதெரபியைப் பயன்படுத்தினர்.

உப்பு சிகிச்சை தற்போது அமெரிக்காவில் உப்பு சிகிச்சை மிகவும் பிரபலமானதாக உள்ளது. அதுவும் இந்த சிகிச்சையானது ஸ்பாக்களில் உப்பு அறைகளாக அறிமுகப்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது. இமாலய உப்பில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன.

எந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்? உப்பு சிகிச்சையின் மூலம் சுவாசப் பிரச்சனைகளான ஆஸ்துமா, சளிக்காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் நெரிசல் போன்றவற்றில் இருந்து விரைவில் விடுபட முடியும். இந்த உப்பு சிகிச்சை உலகின் நியூயார்க், ஆர்லாண்டோ மற்றும் லண்டன் போன்ற பகுதிகளிலும் உள்ளது.

இமாலய உப்பின் நன்மைகளை வேறு எப்படியெல்லாம் பெறலாம்? இமாலய உப்பின் நன்மைகளைப் பெற தொலை தூரத்தில் உள்ள இடங்களுக்குச் சென்று தான் பெற முடியும் என்பதில்லை. இந்த சக்தி வாய்ந்த உப்பை அன்றாட வாழ்வில், இமாலய உப்பு விளக்கு, குளியல் மற்றும் உணவில் கூட சேர்த்து பயன் பெறலாம். முக்கியமாக உப்பு இன்ஹேலர் மூலமும் பலனைப் பெறலாம்.

உப்பு இன்ஹேலர் இந்த இன்ஹேலரானது மிகச்சிறந்த நவீன மற்றும் பழைய தொழில்நுட்பங்களுக்கு இடையேயான கலவையாகும். இந்த இன்ஹேலரில் இமாலய உப்பை அடிப்பகுதியில் போட்டு, பின் உள்ளிழுக்க வேண்டும். இதனால் நுரையீரலில் உப்பு துகள்கள் சென்று, நன்கு வேலை செய்து பிரச்சனைகளைப் போக்கும். மேலும் உப்பு இன்ஹேலரால் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. இப்போது உப்பு இன்ஹேலரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

நன்மை #1 உப்பு இன்ஹேலரில் பயன்படுத்தப்படும் இமாலய உப்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், உடலில் இருந்து டாக்ஸின்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றிவிடும்

நன்மை #2 உப்பு இன்ஹேலர் சுவாசக் குழாய்களில் உள்ள வீக்கம் மற்றும் அலர்ஜியால் சிவந்திருப்பதைக் குறைக்கும்.

நன்மை #3 உப்பு இன்ஹேலர் சிகரெட் புகை மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்து, மூச்சுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் காயங்களில் இருந்து விடுவிக்கும்

எப்படி பயன்படுத்துவது? பிளாஸ்டிக் இன்ஹேலரைப் பயன்படுத்தாமல், பீங்கான் இன்ஹேலரைப் பயன்படுத்துங்கள். அதற்கு இன்ஹேலரின் அடிப்பகுதியில் இமாலய கல் உப்பை வைத்து, பின் அதன் மேல் மௌத் பீஸை வைத்து, வாயால் உறிஞ்சி, மூக்கு வழியே காற்றை வெளியிடுங்கள். முக்கியமாக இதில் நீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.

குறிப்பு * இன்ஹேலரை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம் மற்றும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. * இந்த உப்பு இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்தி வர, சில நாட்களில் சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

* இமாலய உப்பு அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும் மற்றும் வேண்டுமானால் ஆன்லைனிலும் கிடைக்கும்.

12 1513071145 10 himalayansalt

Related posts

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

nathan

இதய நோய்கள் வராமல் தடுக்கும் அதி சக்தி வாய்ந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிபா’ வைரஸ் நோயின் அறிகுறிகள் இவைகள் தான்!

nathan

இரும்பு சத்து உள்ள உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…!

nathan

பெண்களே கேலி – கிண்டலுக்கு இலக்கானால்..

nathan

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஜோடிகள் கவனிக்க வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் மூசு முட்டுவது போல் உணர்வது ஏன்?ச்

nathan

ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும் tamil medical tips

nathan