31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

· பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும். · தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும்.

· புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் சீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.

· உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும். · பப்பாளிபழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.

· தினமும் ஏதாவது ஒரு கீரை, பசுநெய் சேர்த்துக்கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும். மேலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஆனந்தம் அழகைக் கூட்டும்.

Related posts

beauty tips,, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்!

nathan

உங்களின் சோர்ந்த முகத்தை பளிச்சென்று மாற்றும் இந்த 3 ஸ்க்ரப் உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

nathan

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா?

nathan

பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் சாப்டாக மாற வேண்டும்.

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை ப்ளீச்சிங் செய்ய…!

nathan

மெலிந்து போன நடிகர்… கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!

nathan