எமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் உடலில் உள்ள சிறுநீரகங்கள் நல்ல நிலையில் காணப்பட வேண்டும். சிறுநீரகங்களால் இரத்த ஓட்டம் சீராக்கப்படுவதுடன் உடலில் கழிவுகள் சேர்வது தடுக்கப்படுகின்றது.
இருப்பினும், நாகரீக மோகத்தால் உணவுப் பழக்கம் முற்றுமுழுதாக மாறிப் போயுள்ளமையால், எமது சிறுநீரகங்கள் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகின்றன. எமது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை எமது உடலே எமக்கு தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகள் என்னவென்று நாம் அறிந்துகொண்டால் சிறுநீரகங்கள் மேன்மேலும் பழுதடையாது கவனித்துக்கொள்ளலாம்.
இவை தான் அந்த அறிகுறிகள்
01. வீக்கம்
எமது எடலில் உள்ள சிறுநீரகங்கள் பழுதடைந்து வருவதை வீக்கம் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். கால்;, கணுக்கால், கை, பாதம் மற்றும் முகம் என்பன வீங்கும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாமையே இந்த வீக்கம் ஏற்படக் காரணம்.
02. சோர்வு
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் உடலில் சோர்வு ஏற்படும். சிறுநீரகங்களால் எரித்ரோபொய்ட்டீன் என அழைக்கப்படும் ஹோர்மோன் உற்பத்தி செய்யப்படுகின்றது. குறித்த ஹோர்மோன் இரத்த சிவப்பணுக்கள் உருவாவதில் தாக்கம் செலுத்தும். சிவப்பணுக்கள் மூலமே உடல் முழுவதும் ஒக்சிஜன் வாயு கொண்டு செல்லப்படுகின்றது. சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவடையும் போது ஒக்சிஜன் உடலுக்கு கொண்டு செல்லப்படுவதும் குறைவடைகின்றது. அதனால் சோர்வு ஏற்படுகின்றது.
03. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த பின்வருமவனவற்றையும் நாம் அறிகுறிகளாகக் கொள்ளலாம்
– குறைந்தளவு சிறுநீர் வெளியேறல்
– அடிக்கடி அதிகளவு வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறல்
– சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று காணப்படல்
– கருப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறல்
– சிறுநீர் கழிப்பதில் சிரமம்
– இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!